விஜய் மக்கள் மன்ற அலுவலகத்தில் நடிகர் விஜய்க்கு சிலை வைத்த ரசிகர்கள்!!

விஜய் மக்கள் மன்ற அலுவலகத்தில் நடிகர் விஜய்க்கு சிலை வைத்த ரசிகர்கள்!!

விஜய் மக்கள் மன்ற அலுவலகத்தில் நடிகர் விஜய்க்கு சிலை வைத்த ரசிகர்கள்!!
X

மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடித்து வரும் ‘பீஸ்ட்’ படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்தது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார்.

கொரோனா பரவல் காரணமாக தள்ளிப்போன இதன் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு , சென்னையில் பிரம்மாண்ட செட் அமைத்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நடிகர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம், பனையூர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அவரது அலுவலகத்தில், இன்று பிற்பகல் 3 மணியளவில் நடைபெறும் என கூறப்பட்டது.

விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார் என்றும், மன்ற நிர்வாகிகள் சமூக இடைவெளியை பின்பற்றி பங்கேற்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இதற்காக பல்வேறு மாவட்டத்தில் இருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் விஜய் அலுவலகத்துக்கு வந்துள்ளனர். இதற்கிடையே, மக்கள் மன்ற அலுவலகத்தில் நடிகர் விஜய்யின் முழு உருவ சிலை, ரசிகர்களால் வைக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் விஜய் கலந்துகொள்வரா இல்லையா என்பது தெரியவில்லை. நடிகர் விஜய்க்கு சிலை வைப்பது புதிதில்லை. ‘மாஸ்டர்’ படம் ரிலீஸ் ஆன நேரத்தில் பெங்களூரில் விஜய் ரசிகர்கள் அவருக்கு சிலை வைத்து கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags:
Next Story
Share it