ரசிகர்கள் அதிர்ச்சி..!! 2 நாட்களில் இத்தனை நடிகர் நடிகைகளுக்கு கொரோனா தொற்று ..!
ரசிகர்கள் அதிர்ச்சி..!! 2 நாட்களில் இத்தனை நடிகர் நடிகைகளுக்கு கொரோனா தொற்று ..!

தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. 10 நாட்களுக்கு முன்பு தினசரி பாதிப்பு சொற்பமாக இருந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக தினசரி பாதிப்பு மூன்று மடங்காக அதிகரித்து வருகிறது.
கடந்த 4 ஆம் தேதி ஒரு நாள் 2 ஆயிரத்தில் இருந்த கொரோனா பாதிப்பு இன்று 8,944 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது.அதிவேகமாக பரவும் கொரோனா பாதிப்பு நடிகர் நடிகைகளையும் விட்டுவைக்கவில்லை.
கடந்த 2 நாட்களில் மட்டும் பல நடிகர் நடிகைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நடிகை திரிஷா, இயக்குனர் ப்ரியதர்ஷன், இசையமைப்பாளர் தமன், நடிகர் சத்யராஜ் ஆகியோர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் நடிகை மீனா, நடிகர் அருண்விஜய், நடிகர் மகேஷ்பாபு உட்பட பல சினிமா பிரபலங்களுக்கு கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
Tags:
Next Story

