ரசிகர்கள் அதிர்ச்சி.. மேலும் ஒரு பிரபல நடிகர் திடீர் மரணம் !!
ரசிகர்கள் அதிர்ச்சி.. மேலும் ஒரு பிரபல நடிகர் திடீர் மரணம் !!

திரைப்பட நடிகர், தயாரிப்பு மேற்பார்வையாளர், தயாரிப்பாளர் அந்தோணி சேவியர் உயிரிழந்தது திரைத்துறையினரை மேலும் அதிர்ச்சி அடையச்செய்தது.
கொரோனா பாதிப்புக்கு பிறகு தமிழகத்தில் திரையுல பிரபலங்கள் பலரும் அடுத்தடுத்து உயிரிழந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விவேக், இயக்குநர்கள் எஸ்.பி ஜனநாதன், தாமிரா, கே.வி ஆனந்த் என பலரும் உயிரிழந்து வருகின்றனர்.

இதில் இருந்து மீள்வதற்குள் அடுத்த ஒரு நடிகர் உயிரிழந்திருப்பபது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நான் மகான் அல்ல, சிறுத்தை, மாஸ், பாண்டிய நாடு, ஜீவா, பாயும்புலி, நோட்டா, அயோக்யா, சக்ரா, ஈஸ்வரன் போன்ற பல படங்களுக்கு நிர்வாக தயாரிப்பாளராக பணி புரிந்தவர் அந்தோணி சேவியர். வயது 51. சுசீந்திரன் இயக்கத்தில் “நெஞ்சில் துணிவிருந்தால்” படத்தை தயாரித்தார். பல படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்திருக்கிறார்.
குடும்பத்துடன் சொந்த ஊரான தூத்துகுடிக்கு சென்ற இடத்தில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டப்போதும் இன்று காலை சுமார் 11 மணியளவில் அவர் மரணமடைந்தார். அவரது உறவினர்கள் பெரும்பாலும் மதுரை புதூரில் வசித்து வருவதால் அவரது உடலை அங்கு எடுத்து செல்கிறார்கள். நாளை மதியம் நல் அடக்கம் நடை பெறுகிறது என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

. தயாரிப்பாளர் அந்தோணி சேவியருக்கு ஜோஸ்பின் ஜெயா என்ற மனைவியும், கல்லூரி மாணவியான அபி என்ற மகளும், 18 வயதில் ஜெய்சன் என்ற மகனும் உள்ளனர்,
newstm.in

