Theme Check

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு… பிராவோ அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி !

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு… பிராவோ அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி !

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு… பிராவோ அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி !
X

மேற்கிந்தியத் தீவுகள்- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் 4 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று முடிந்துள்ளது. மழை காரணமாக மூன்று போட்டிகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், ஒரேயொரு டி20 போட்டி மட்டுமே முழுமையாக நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, தொடரைக் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில், சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக மேற்கிந்தியத் தீவுகள் அணி நட்சத்திர வீரர் டுவைன் பிராவோ அறிவித்துள்ளார். கரிபிய மண்ணில் இனிமேல் சர்வதேச டி20 போட்டியில் விளையாடமாட்டார். வரும் டி20 உலகக் கோப்பையோடு டி20 போட்டிகளில் இருந்து பிராவோ ஓய்வு பெற உள்ளார் என்று கேப்டன் பொலார்ட் தெரிவித்துள்ளார்.

dwayne-bravo

கரீபிய மண்ணில் தனது கடைசி டி20 போட்டி குறித்து, பாகிஸ்தான் அணியுடனான 4ஆவது டி20 போட்டி தொடங்குவதற்கு சில மணிநேரத்துக்கு முன்புதான் தனது சக அணி வீரர்களிடம் டுவைன் பிராவோ இதைப் பகிர்ந்துள்ளார். அதன்பின் இந்தத் தகவலை மே.இ.தீவுகள் கிரிக்ெகட் வாரியம் அதிகாரபூர்வமாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டது.

மே.இ.தீவுகள் அணியின் கேப்டன் பொலார்ட் வீடியோவில் கூறுகையில், எங்கள் அணியின் மிகப்பெரிய ஜாம்வான்களில் ஒருவருக்கு வாழ்த்துக் கூற இந்த வாய்ப்பை பயன்படுத்துகிறேன். டெஸ்ட், ஒருநாள், டி20 என 3 பிரிவுகளிலும் பிராவோ விளையாடியுள்ளார், இதில் டெஸ்ட், ஒருநாள் போட்டியில் மட்டும் நீண்டகாலத்துக்குமுன்பே ஓய்வு பெற்றுவிட்டார். ஆனால், கரிபீய மண்ணில் இன்று நடக்கும் கடைசிப் போட்டிதான் பிராவோவின் சர்வதேச கடைசிடி20 போட்டியாக இருக்கப் போகிறது. இதை எதிர்நோக்கி இருக்கிறோம்.ஆனால், டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குப்பின்புதான் டி20 போட்டியில் இருந்து பிராவோ ஓய்வு பெறுவார்” எனத் தெரிவித்துள்ளார்.

dwayne-bravo

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் டெத் பவுலர், தேவையான நேரத்தில் ஆல்ரவுண்டர் அவதாரம் எடுக்கும் பிராவோ மே.இ.தீவுகள் அணியின் மிகப்பெரிய பலமாக உள்ளார். இ.தீவுகள் 2012 மற்றும் 2016ம் ஆண்டுகளில் டி20 உலகக் கோப்பையை கைப்பற்றிய அணியில் இடம் பெற்றிருந்த பிராவோ அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார்.

பிராவோ மே.இ.தீவுகள் அணிக்காக 85 டி20 போட்டிகளி்ல விளையாடி 76 விக்கெட்டுகளையும், 1,229 ரன்கள் குவித்துள்ளார். 164 ஒருநாள் போட்டிகளில் 2,968 ரன்களும் 199 விக்கெட்டுகளையும், 40 டெஸ்ட் போட்டிகளில் 2,200 ரன்களும் 86 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். கடந்த மாதம் தென் ஆப்பிரி்க்காவுக்கு எதிராக நடந்த டி20 போட்டியில் 19 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை பிராவோ வீழ்த்தியதுதான் சிறந்தபந்துவீச்சாக அமைந்தது.


newstm.in

Tags:
Next Story
Share it