ரசிகர்கள் அதிர்ச்சி.. பிரபல நடிகையின் குடும்பத்தில் அனைவருக்கும் கொரோனா !

ரசிகர்கள் அதிர்ச்சி.. பிரபல நடிகையின் குடும்பத்தில் அனைவருக்கும் கொரோனா !

ரசிகர்கள் அதிர்ச்சி.. பிரபல நடிகையின் குடும்பத்தில் அனைவருக்கும் கொரோனா !
X

தமிழ் சினிமாவில் 1990-களில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா. திரையுலகில் கொடிகட்டிப் பறந்தார். ரஜினி, கமல், சிரஞ்சீவி, மோகன்லால், கார்த்திக், பிரபு, விஜயகாந்த் மற்றும் அஜித் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு சமீபத்தில் வெளியான ரஜினிகாந்தின் ‘அண்ணாத்த’ திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

meena

இந்த நிலையில் நடிகை மீனாவின் குடும்பத்தில் அனைவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. நடிகை மீனா உள்பட அவரது ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர்கள் தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த அதிர்ச்சிகரமான தகவலை மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், 2022ல் எனது வீட்டிற்கு வந்த முதல் பார்வையாளர் கொரோனா. அது என் முழு குடும்பத்தையும் பிடித்துள்ளது. ஆனால் நான் அதை இருக்க விடப்போவதில்லை. மக்கள் அனைவரும் ஜாக்கிரதையாக இருங்கள். தயவுசெய்து பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருங்கள். பொறுப்பாக இருங்கள். இந்த வைரசை பரவ விடாதீர்கள். எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள், என மீனா கூறி உள்ளார்.

meena

மீனா மற்றும் அவரது குடும்பத்தினர் கொரோனா பாதிப்பில் இருந்து விரைவில் குணமடைய வேண்டும் என ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் சமூக வலைளங்களில் பதிவிட்டு வருகின்றனர். தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக 2ஆம் அலையின்போது அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தற்போது மூன்றாவது அலையின்போதும் முக்கிய பிரமுகர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


newstm.in

Tags:
Next Story
Share it