நடிகர் விஜய் வீட்டின் முன்பு ரசிகர்கள் திடீர் தர்ணா !! வாழ்த்துகூற வந்தவர்களால் பரபரப்பு !!

நடிகர் விஜய் வீட்டின் முன்பு ரசிகர்கள் திடீர் தர்ணா !! வாழ்த்துகூற வந்தவர்களால் பரபரப்பு !!

நடிகர் விஜய் வீட்டின் முன்பு ரசிகர்கள் திடீர் தர்ணா !! வாழ்த்துகூற வந்தவர்களால் பரபரப்பு !!
X

திடீர் என நடிகர் விஜய் வீட்டில் இருந்து வெளியில் வந்து தங்களைப் பார்க்க கோரிக்கை விடுத்து ரசிகர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வருபவர் நடிகர் விஜய். இவர் இன்று தனது 47ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி அவர் தற்போது நடித்துவரும் ‘பீஸ்ட்’ படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. இந்த இரண்டையும் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

மேலும், நடிகர் விஜய்க்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளம் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகர் கமல்ஹாசன் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அன்பு தம்பிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நடிகரும் திமுக எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதேபோல் பல்வேறு பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க அவரது வீட்டிற்கு ரசிகர்கள் ஏராளமானோர் சென்றனர். அப்போது அவரை வாழ்த்தி முழக்கம் எழுப்பினர். ஆனால் அவர்களை சந்திக்க விஜய் வீட்டில் இருந்து வெளியேவரவில்லை. இதனால் திடீரென நடிகர் விஜய் வீட்டில் இருந்து வெளியில் வந்து தங்களைப் பார்க்க கோரிக்கை விடுத்து ரசிகர்கள் வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்ணாவில் ஈடுபட்ட விஜய் ரசிகர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். ஆனால் உண்மையில் விஜய் வீட்டில் தான் இருந்தாரா என்பதை ரசிகர்கள் அறியவில்லை.

newstm.in

Tags:
Next Story
Share it