Theme Check

ரசிகர்கள் மரண வெய்ட்டிங்.. இந்தியா- பாகிஸ்தான் இடையே டி20 கிரிக்கெட் போட்டி !!

ரசிகர்கள் மரண வெய்ட்டிங்.. இந்தியா- பாகிஸ்தான் இடையே டி20 கிரிக்கெட் போட்டி !!

ரசிகர்கள் மரண வெய்ட்டிங்.. இந்தியா- பாகிஸ்தான் இடையே டி20 கிரிக்கெட் போட்டி !!
X

டி20 கிரிக்கெட் உலக கோப்பை போட்டிகள் வரும் அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதனால் கிரிக்கெட் ரசிகர்களை அதனை ஆர்வமுடன் எதிர்பார்த்துள்ளனர். அவர்களுக்கு மேலும் ஊற்சாகம் அளிக்கும் வகையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இத்தொடரில் மோதவுள்ளது.

டி20 கிரிக்கெட் உலக கோப்பைக்கான அணிகள் அடங்கிய பட்டியலை எஐ.சி.சி. வெளியிடப்பட்டுள்ளது. அதில் சூப்பர் 12 பிரிவில் குரூப் 1 மற்றும் குரூப் 2 என இரண்டாக அணிகள் பிரிக்கப்பட்டு உள்ளன. இவற்றில் குரூப் 1ல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 4 அணிகளும், குரூப் 2ல் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய 4 அணிகளும் இடம் பெற்றுள்ளன.

இவை தவிர, குரூப் ஏ மற்றும் குரூப் பி என இரண்டாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன. குரூப் ஏ-வில் இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, நமீபியா ஆகிய 4 அணிகள் இடம் பெறும்.
குரூப் பி-யில் வங்காளதேசம், ஸ்காட்லாந்து, பப்புவா நியூ கினியா, ஓமன் ஆகிய 4 அணிகள் இடம் பெறும். குரூப் ஏ மற்றும் குரூப் பி அணிகளில் வெற்றி பெறும் அணிகள் முறையே குரூப் 1 மற்றும் குரூப் 2 ஆகியவற்றில் இடம் பெறும்.

தேபோன்று, குரூப் ஏ-வில் 2வது இடம் பெறும் அணி குரூப் 2விலும், குரூப் பி-யில் 2வது இடம் பெறும் அணி குரூப் 1லும் இடம் பெறும். இந்த பட்டியலில் ஒரே குரூப்பில் இருக்கும் அணிகள் போட்டியில் மோதவேண்டும். இதனால் இந்தியா- பாகிஸ்தான் போட்டிகள் உறுதியாகியுள்ளது. ஐ.சி.சி. சாம்பியன்ஷிப் போட்டிகளில் இதுவரை இந்தியாவை பாகிஸ்தான் வென்றதில்லை என்ற சாதனை வரலாறு தொடர்கிறது.

newstm.in

Tags:
Next Story
Share it