நடிகர் விஜய்-க்கு சிலை வைத்த ரசிகர்கள்.. வைரலாகும் படங்கள் !

நடிகர் விஜய்-க்கு சிலை வைத்த ரசிகர்கள்.. வைரலாகும் படங்கள் !

நடிகர் விஜய்-க்கு சிலை வைத்த ரசிகர்கள்.. வைரலாகும் படங்கள் !
X

தமிழகத்தில் நடிகர்கள், நடிகைகளுக்கு சிலை வைப்பது புதிது அல்ல. ஏன், நமீதா, குஷ்புக்கு கோவில் கட்டிய ரசிகர்கள் எல்லாம் இங்கே இருக்கிறார்கள். ஆனால் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய்க்கு தமிழகத்தில் சிலை இல்லை என்ற ஆதங்கத்தில் ரசிகர்கள் இருந்தனர். ஆனால் மங்களூர் விஜய் மக்கள் இயக்கத்தினர் விஜய்க்கு சிலை வைத்து அசத்தியுள்ளனர்.

vijay statue

விஜய் மீது தீவிர பற்று கொண்டுள்ள அவரின் ரசிகர்கள் சென்னை அடுத்த பனையூரில் உள்ள விஜய் மக்கள் மன்ற அலுவலகத்தில் இந்த சிலையை வைத்து அசத்தியுள்ளனர். அந்த சிலையை விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளரான புஸ்ஸி ஆனந்த் திறந்து வவைத்தார். சிலை திறப்பு விழாவின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி விஜய் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

vijay statue

விஜய்க்கு சிலை வைத்ததை அவரின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகின்றனர்.

ஆனால் இந்த சிலை திறந்தது நடிகர் விஜய்க்கு தெரியுமா என்று தெரியவில்லை. ஏனெனில் அதிமுக அலுவலகத்தில் ஜெயலலிதா சிலையை திறப்பதாக கூறி சசிகலா சாயலில் இருந்த சிலையை திறந்ததாக சர்ச்சை எழுந்தது. அதேபோன்று ரசிகர்களால் தற்போது நிறுவப்பட்டிருப்பது விஜய் சிலை என மனத்தில் நினைத்துக்கொண்டு பார்த்தால் தான் தெரியும் என சிலர் கூறுகின்றனர்.

vijay statue

மாஸ்டர் படத்துக்கு பிறகு விஜய் நடிப்பில் அடுத்ததாக வெளிவர இருக்கும் படத்துக்கு பீஸ்ட் என பெயரிடப்பட்டுள்ளது. இதில் அவருக்கு ஜோடியாகி இருப்பவர் பூஜா ஹெக்டே. சன் புரொடெக்‌ஷன்ஸ் தயாரிப்பில், இப்படத்தை நெல்சன் இயக்குகிறார்.


newstm.in

Tags:
Next Story
Share it