பேருந்து கட்டணத்தைவிட குறைந்தது விமான கட்டணம்
சென்னையில் இருந்து பெங்களூரு செல்வதற்கான விமான கட்டணம் 998 ரூபாய் தான். வழக்கமாக கடைசி நேரத்தில் டிக்கெட் புக் செய்தால் 8 ஆயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். சென்னையில் இருந்து ஹைதராபாத் செல்ல விமான கட்டணம் ரூ.1200 ஆகவும், டெல்லி விமான கட்டணம் ரூ.3000 ஆகவும், மும்பை விமான கட்டணம் ரூ.2000 ஆகவும் உள்ளது.

கொரோனா அச்சம் காரணமாக நம் நாட்டில் விமான கட்டணம் கடுமையாக சரிந்துள்ளது. சென்னையில் இருந்து பெங்களூரு, மும்பை, டெல்லி, ஹைதராபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கான கட்டணம் வெகுவாக குறைந்துள்ளது.
சென்னையில் இருந்து பெங்களூரு செல்வதற்கான விமான கட்டணம் 998 ரூபாய் தான். வழக்கமாக கடைசி நேரத்தில் டிக்கெட் புக் செய்தால் 8 ஆயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். சென்னையில் இருந்து ஹைதராபாத் செல்ல விமான கட்டணம் ரூ.1200 ஆகவும், டெல்லி விமான கட்டணம் ரூ.3000 ஆகவும், மும்பை விமான கட்டணம் ரூ.2000 ஆகவும் உள்ளது.
அடுத்த சில நாட்களில் இது மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக டெல்லி, மும்பை போன்ற பெருநகரங்களுக்கு இறுதி நேரத்தில் விமான டிக்கெட் புக் செய்தால், ரூ.20 ஆயிரம் வரை செலவாகும். ஆனால் தற்போது பல மடங்கு டிக்கெட் கட்டணம் குறைந்துள்ளது.
newstm.in