விடைத்தாள் திருத்தும் பணி தொடக்கம்.. முடிவுகள் வெளியாவது எப்போது தெரியுமா..?
விடைத்தாள் திருத்தும் பணி தொடக்கம்.. முடிவுகள் வெளியாவது எப்போது தெரியுமா..?

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பொதுத் தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்த நிலையில், இந்த ஆண்டு அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் நடத்தப்பட்டது. குறிப்பாக 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு திட்டமிட்டபடி பொதுத் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
12-ம் வகுப்பு பொதுத் தேர்வு மே 5-ம் தேதி தொடங்கி மே 28-ம் தேதி முடிவடைந்தது. அதேபோல், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6-ம் தேதி தொடங்கி மே 30-ம் தேதி வரை தேர்வு நடைபெற்றது. 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 9-ம் தேதி தொடங்கி நேற்று (31-ம் தேதி)முடிவடைந்தது.
இந்த நிலையில், 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான விடைத்தாள்களை திருத்தும் பணி இன்று (1-ம் தேதி) முதல் தொடங்குகிறது.
நேற்று (31-ம் தேதி) நிறைவடைந்த 11-ம் வகுப்பு பொதுத்தேர்வின் விடைத்தாள்கள் திருத்தும் பணி வரும் 9-ம் தேதி தொடங்குகிறது.
10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 17-ம் தேதியும், 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 7-ம் தேதியும்,12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 23-ம் தேதியும் வெளியாகவுள்ளது.

