Theme Check

பால் விற்பனைக்கு சொந்தமாக ஹெலிகாப்டர் வாங்கிய விவசாயி !!

பால் விற்பனைக்கு சொந்தமாக ஹெலிகாப்டர் வாங்கிய விவசாயி !!

பால் விற்பனைக்கு சொந்தமாக ஹெலிகாப்டர் வாங்கிய விவசாயி !!
X

மகாராஷ்டிராவில் விவசாயி ஒருவர் பால் விற்பனை செய்வதற்காக சொந்தமாக ஹெலிகாப்டர் வாங்கிய சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மகாராஷ்டிராவின் பிவாண்டி நகரத்தைச் சேர்ந்த விவசாயியும் பால் வியாபாரம் செய்யும் ஜனார்த்தனன் பால் விற்பனைக்காக அடிக்கடி குஜராத், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று வருவதால் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, ஜனார்த்தனன், 30 கோடி மதிப்புள்ள ஹெலிகாப்டரை சொந்தமாக வாங்கியுள்ளார். இதற்காக இரண்டரை ஏக்கர் பரப்பளவில் பைலட் அறை, ஹெலிபேட் கட்டவும் ஏற்பாடு செய்து வருகிறார்.பயண நேரத்தைக் குறைத்து தொழிலில் கூடுதல் கவனம் செலுத்த ஹெலிகாப்டரை வாங்கியுள்ளதாக கூறியுள்ளார்

விவசாயிகள் என்றாலே பலருக்கும் நினைவுக்கு வருவது அவர்களின் ஏழ்மையும், இயலாமையும்தான். சில விவசாயிகள் இரு சக்கர வாகனம் வாங்குவதற்குக் கூட வழியில்லாமல் கடனில் தவித்து வரும் வேளையில் பிவாண்டி பகுதியைச் சேர்ந்த விவசாயியும் பால் வியாபாரியுமான ஜனார்த்தன் போரி 30 கோடி ரூபாய் செலவழித்து ஹெலிகாப்டர் ஒன்றை சொந்தமாக வாங்கியுள்ளது அங்கிருப்போரை ஆச்சிரியத்தில் உறைய வைத்துள்ளது.

இதே போல் அந்த பகுதியில் மற்றொருவர் அமெரிக்க அதிபர் பயன்படுத்தும் காடிலாக் காரை வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags:
Next Story
Share it