Theme Check

விவசாயிகள் மகிழ்ச்சி..!! இனி 2 ஆயிரம் ரூபாய் நேரடியாக வீட்டுக்கே வரும்!!

விவசாயிகள் மகிழ்ச்சி..!! இனி 2 ஆயிரம் ரூபாய் நேரடியாக வீட்டுக்கே வரும்!!

விவசாயிகள் மகிழ்ச்சி..!! இனி 2 ஆயிரம் ரூபாய் நேரடியாக வீட்டுக்கே வரும்!!
X

விவசாயக் குடும்பங்களுக்கு வருமான ஆதரவு வழங்குவதற்காக பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டம் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இந்தத் தொகை மூன்று தவணைகளாக பிரித்து தவணைக்கு 2 ஆயிரம் ரூபாய் வீதம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது.

agri

கடந்த மே 31-ம் தேதியன்று பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் 11-வது தவணையை பிரதமர் மோடி வெளியிட்டார். இந்த திட்டத்தின் கீழ் 10 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

பிரதமர் கிசான் திட்டத்தின் சிறப்பு அம்சமே விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கே நேரடியாக பணம் அனுப்பப்படுகிறது. எனவே, அவர்கள் பணத்துக்காக அரசு அலுவலகங்களுக்கு சென்று அலையத் தேவையில்லை. ஆனால், வங்கிக் கணக்கில் 2ஆயிரம் ரூபாய் அனுப்புவதே விவசாயிகளுக்கு பெரும் சவுகரியமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், வீட்டுக்கே நேரடியாக 2 ஆயிரம் ரூபாயை டெலிவரி செய்வதற்காக இந்திய தபால் துறை புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

post-bank

இதற்காக ‘ஆப்கா பேங்க், ஆப்கே துவார்’ என்ற திட்டத்தை இந்திய தபால் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய பிரதமர் கிசான் 2 ஆயிரம் ரூபாய் பணம் நேரடியாக வீட்டுக்கே வழங்கப்படும். தபால் ஊழியர்கள் இந்த பணத்தை வீட்டுக்கே டெலிவரி செய்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:
Next Story
Share it