Theme Check

விவசாயிகள் விவகாரம்... 3 எம்பி-க்கள் சஸ்பெண்ட் ! வெங்கையா நாயுடு உத்தரவு !!

விவசாயிகள் விவகாரம்... 3 எம்பி-க்கள் சஸ்பெண்ட் ! வெங்கையா நாயுடு உத்தரவு !!

விவசாயிகள் விவகாரம்... 3 எம்பி-க்கள் சஸ்பெண்ட் ! வெங்கையா நாயுடு உத்தரவு !!
X

புதிய வேளாண் சட்டங்கள் மற்றும் விவசாயிகள் பிரச்னை தொடர்பாக ராஜ்யசபாவில் 15 மணி நேரம் விவாதிக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது.

இந்திய நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் உரை, பொருளாதார ஆய்வறிக்கை, பட்ஜெட் தாக்கல் என முக்கிய அலுவல்கள் எல்லாம் நிறைவு பெற்றுவிட்டது. இந்நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும்நேற்று கூடியபோது, டெல்லியில் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டது. இதனால் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.

இன்றும் அவை கூடியதும், விவசாயிகள் பிரச்னை குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதனையடுத்து, விவசாயிகள் பிரச்னை குறித்து 15 மணி நேரம் விவாதிக்க ஒப்பு கொள்ளப்பட்டது. பின்னர் அவை துவங்கியது.

அப்போது, விவசாயிகள் பிரச்னை குறித்து பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலவரும், எம்பியுமான குலாம் நபி ஆசாத், வேளாண் சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெறவேண்டும். ஆங்கிலேயர் ஆட்சியின் போது கூட, விவசாயிகள் சட்டம் திரும்ப பெறப்பட்டது என்பதை சுட்டிக்காட்டினார்.

மேலும், தலைநகர் டெல்லியில் டிராக்டர் பேரணிக்கு பின்னர் மாயமான விவசாயிகள் குறித்து ஆராய தனிக்குழு அமைக்க வேண்டும் என்றும் பேரணியில் வன்முறையை தூண்டியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

பின்னர் பேசிய, சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த ராம்கோபால், விவசாயிகளை ஒடுக்குவதற்காக, காசிப்பூர் எல்லையில் பலத்த ஏற்பாடுகளை மத்திய அரசு செய்திருந்தது. அதுபோல, பாகிஸ்தான் எல்லையில் கூட செய்யவில்லை என்று சாடினார்.

வேளாண் சட்டத்திற்கு எதிராக ஆம் ஆத்மி எம்.பி-க்கள் சஞ்சய் சிங், நரைன் தாஸ் குப்தா மற்றும் சுஷில்குமார் குப்தா ஆகியோர் தொடர்ந்து கண்டன முழக்கங்களை எழுப்பி வந்தனர். இதனால், அவையை ஏற்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனையடுத்து, அவர்கள் மூன்று பேரையும் அமைதியாக இருக்குமாறு, அவைத்தலைவர் வெங்கையா நாயுடு உத்தரவிட்டார்.

ஆனால், அவரது உத்தரவை மீறியும் ஆம் ஆத்மி எம்.பி-க்கள் தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கோஷம் போட்டனர். இதனால், இன்று நாள் முழுவதும் அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும், அவர்களை சபையில் இருந்து உடனே வெளியேறும்படி வெங்கையா நாயுடு உத்தரவிட்டார்.

Tags:
Next Story
Share it