Theme Check

14 தங்கப் பதக்கங்களை அள்ளிய விவசாயி மகன்! மேடையில் அழுத தாய்!

14 தங்கப் பதக்கங்களை அள்ளிய விவசாயி மகன்! மேடையில் அழுத தாய்!

14 தங்கப் பதக்கங்களை அள்ளிய விவசாயி மகன்! மேடையில் அழுத தாய்!
X

கர்நாடகாவில் குனூர் எனும் குக்கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். குனூர் கிராமத்தில் இவருடைய 2 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு 2 மகன்கள். இவருடைய இரண்டாவது மகன் பிரசாந்த்.

தந்தையுடன் சிறு வயதிலிருந்தே ஓய்வு நேரத்தில் தோட்டத்தில் விவசாயம் செய்து வந்த பிரசாந்த். பின்னர் கல்லூரி சேரும் போது, மைசூருவில் உள்ள தோட்டக்கலைத் துறை கல்லூரியில் பி.எஸ்சி. தோட்டக்கலைத்துறையில் சேர்ந்தார். இந்த ஆண்டு இறுதி படிப்பை முடித்த பிரசாந்த், அனைத்து தேர்விலும் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பிடித்து சாதித்துள்ளார்.

பட்டமளிப்பு விழாவில், மொத்தமாக 14 தங்கப்பதக்கங்களை கல்லூரியிலும் அறுவடை செய்துள்ளார் பிரசாந்த். தங்களது மகன் ஒட்டுமொத்தமாக 14 தங்கப் பதக்கங்களையும் பெற்றதை ஆனந்த கண்ணீருடன் கீழேயிருந்து பார்த்து பரவசமான தாய் வசந்தா, மேடையில் ஏறி பிரசாந்த்துக்கு முத்தமழை பொழிந்தார் ஆனந்தத்தில் அழுதார்.

தங்கப் பதக்கங்களை வென்ற பிரசாந்த் கூறுகையில், நாங்கள் குடும்பம் விவசாய குடும்பம். இப்போது நிறைய பேருக்கு விவசாயத்தின் மீது ஆர்வம் இல்லாமல் போய் விடுகிறது. அதனால் விவசாயத்தில் ஏதாவது சாதிக்க விரும்பினேன். விவசாயத்தில் எல்லோரும் பாரம்பரியமாக ஒரே பயிரை சாகுபடி செய்து வருகிறார்கள். அவர்களுக்கு சரியான வழிகாட்டுதல்களை வழங்கும் வகையில் விவசாய விஞ்ஞானியாக மாறுவதே எனது குறிக்கோள் என்றார்.

Tags:
Next Story
Share it