Theme Check

டெல்லியில் 6 மாதங்களாக போராடும் விவசாயிகள்.. இன்று நாடு முழுவதும் போராட்டம் அறிவிப்பு!

டெல்லியில் 6 மாதங்களாக போராடும் விவசாயிகள்.. இன்று நாடு முழுவதும் போராட்டம் அறிவிப்பு!

டெல்லியில் 6 மாதங்களாக போராடும் விவசாயிகள்.. இன்று நாடு முழுவதும் போராட்டம் அறிவிப்பு!
X

மத்திய அரசு புதிதாக திருத்தம் செய்து கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் எதிர்த்து வருகின்றனர். அவர்கள் டெல்லி எல்லையில் 6 மாதங்களாக தங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த சட்டங்களை வாபஸ் பெறக்கோரி, விவசாயிகள் கடந்த நவம்பர் 26ஆம் தேதி டெல்லி எல்லையை முற்றுகையிட்டு போராட்டத்தை தொடங்கினர்.

போராட்டம் தொடங்கி 6 மாதங்கள் நிறைவடைவதையொட்டி, இன்று (மே 26) கருப்பு தினமாக அனுசரித்து வழகிறது விவசாய அமைப்பு. அதன்படி நாடு முழுவதும் எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்க 40 விவசாய சங்கங்கள் அடங்கிய சம்யுக்தா கிசான் மோர்ச்சா அழைப்பு விடுத்துள்ளது. விவசாயிகளின் போராட்ட அழைப்புக்கு காங்கிரஸ், திமுக, சிவசேனா, தேசிய மாநாட்டு கட்சி உள்பட 12 எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இதனையடுத்து விவசாயிகள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். பல விவசாயிகள், அமைப்பினர் தங்கள் இல்லங்களில் கருப்புகொடி ஏற்றி மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வேளாண் சட்டங்களை திரும்பபெறும் வரை போராட்டம் நடத்துவோம் என கூறி டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

newstm.in

Tags:
Next Story
Share it