தமிழகத்தில் வேகமாக பரவும் கொரோனா!! சென்னையில் இருவருக்கு கொரோனா உறுதி!!
தமிழகத்தில் வேகமாக பரவும் கொரோனா!! சென்னையில் இருவருக்கு கொரோனா உறுதி!!

அமெரிக்காவில் இருந்து தோஹா வழியாக சென்னை வந்த 15 வயது சிறுவனுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக விமான நிலைய மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் சென்னையில் இருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வருவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுவரை 34 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் 15 வயது சிறுவனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 
அமெரிக்காவில் இருந்து தோஹா வழியாக சென்னை வந்த 15 வயது சிறுவனுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக விமான நிலைய மருத்துவக் குழுவினர் தெரிவித்தனர். இதனையடுத்து கொரோனா அறிகுறி உள்ள சிறுவனை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்னை விமான நிலைய மருத்துவக் குழுவினர் அனுப்பி வைத்தனர்.
முன்னதாக ஓமன் நாட்டிலிருந்து இந்தியா திரும்பிய 45 வயது நபருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது உறுதிப்படுத்தப்பட்டது. கொரோனா பாதித்த நபர் கடந்த 5 நாட்களுக்கு முன் தங்கள் மருத்துவமனைக்கு காய்ச்சலுடன் வந்ததாகவும் அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளாகவும் ராஜிவ் காந்தி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இருவரும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
newstm.in


