Theme Check

மகளின் திருமண அழைப்பிதழை வித்தியாசமாக அச்சடித்த தந்தை!! குவியும் வாழ்த்துக்கள்..!!

மகளின் திருமண அழைப்பிதழை வித்தியாசமாக அச்சடித்த தந்தை!! குவியும் வாழ்த்துக்கள்..!!

மகளின் திருமண அழைப்பிதழை வித்தியாசமாக அச்சடித்த தந்தை!! குவியும் வாழ்த்துக்கள்..!!
X

கிருஷ்ணகிரி அருகே மகளின் திருமண அழைப்பிதழை திருக்குறள் புத்தகத்துடன் இணைத்து அச்சிட்டு பெண்ணின் தந்தை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியைச் சேர்ந்த முனிரத்தினம், பட்டாசு கடை நடத்தி வருகிறார். இவர் தனது மகளுக்கு திருமணம் செய்ய திட்டமிட்டு உள்ள நிலையில், அடுத்த மாதம் தேதி குறித்துள்ளார். தற்போது மகளின் திருமணத்திற்காக அழைப்பிதழ் அச்சடிக்க திட்டமிட்ட அவர், அனைவருக்கும் பயனுள்ளதாக அமைய வேண்டும் என நினைத்துள்ளார்.

இதற்காக அவர் புதிய முயற்சியாக திருமண அழைப்பிதழை திருக்குறள் புத்தகத்துடன் இணைத்து அச்சடித்து உள்ளார். திருக்குறள் புத்தகத்தின் முதல் பக்கத்திலும், கடைசி பக்கத்திலும் திருமண அழைப்பிதழை அச்சடித்து உள்ளார். மேலும் 1330 குறள்களும் விளக்கத்துடன் உள்ளவாறு அச்சடித்து உள்ளார்.

book

இது குறித்து முனிரத்தினம் கூறுகையில், தன்னால் முடிந்தவரை அனைவரின் இல்லங்களிலும் திருக்குறளை கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் அழைப்பிதழை இவ்வாறு அச்சடித்துள்ளதாக தெரிவித்தார்.மேலும், திருமண அழைப்பிதழை பார்ப்பவர்கள் திருக்குறளையும் வாசிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது எனவும் தனது மகளின் திருமணத்தில் தாம்பூல பைக்கு பதிலாக மரக்கன்றுகள் வழங்க உள்ளதாகவும் கூறினார்.

Next Story
Share it