Theme Check

மாமனார் மற்றும் மைத்துனரின் காம லீலை.. கதறும் கணவரை இழந்த இளம்பெண்..!!

மாமனார் மற்றும் மைத்துனரின் காம லீலை.. கதறும் கணவரை இழந்த இளம்பெண்..!!

மாமனார் மற்றும் மைத்துனரின் காம லீலை.. கதறும் கணவரை இழந்த இளம்பெண்..!!
X

திருப்பத்தூர் மாவட்டம் கொடுமாம்பள்ளி பகுதியைச் சேர்ந்த மணி என்பவரின் மகள் சுவித்ரா (வயது 24) பொம்மிகுப்பம் தாதனவலசை பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகன் ஜெயபாரதி (வயது 36) இவர்கள் இருவருக்கும் திருமணமாகி மூன்றரை வயது உள்ள இரட்டை ஆண் குழந்தைகள் இரண்டு வயது உள்ள ஒரு பெண் குழந்தை என மூன்று குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் திடீரென்று கணவன் ஜெயபாரதி இறந்துவிட்டதால் அடுத்து குழந்தைகளை பராமரித்து வளர்க்க வழியில்லாமல் தவித்துக் கொண்டிருந்த சுவித்ராவை மாமனார் ராமலிங்கம் மற்றும் மைத்துனர் பூபதி இருவரும் அடித்து துன்புறுத்தி பாலியல் தொந்தரவு கொடுத்ததால் செய்வதறியாது திருப்பத்தூர் கிராமிய காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.

ஆனால், புகார் குறித்து காவல்துறை நடவடிக்கை எடுப்பதற்குள் அடுத்தடுத்து நடந்த அடிதடி மற்றும் பாலியல் சீண்டலுக்குள் தவித்த சுவித்ரா மூன்று குழந்தைகளுடன் மீண்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை நாடிய பிறகு எல்லைப் பகுதிக்கு உட்பட்ட திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்,

என்னுடைய கணவர் இறந்த பிறகு மாமனார் ராமலிங்கம் மற்றும் மைத்துனர் பூபதி ஆகிய இருவரும் எனக்கு பாலியல் சீண்டல் கொடுப்பது மட்டுமல்லாமல் அடித்து துன்புறுத்தி, என் கணவருக்கு சொந்தமான சுமார் ஒன்றரை ஏக்கர் நிலம் இருசக்கர வாகனம் மற்றும் இரண்டு பவுன் தங்க செயின் ஆகியவற்றை அபகரிக்க நினைக்கின்றனர். அவற்றையெல்லாம் மீட்டு கொடுத்து என்மீது பாலியல் சீண்டல் மற்றும் வன்முறையில் ஈடுபட முயன்றவர்கள் மீது காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

Next Story
Share it