Theme Check

கொரோனா பயம்! 5 வயது மகளை 15 முறை கத்தியால் குத்தி கொலை செய்த இந்திய பெண் !!

கொரோனா பயம்! 5 வயது மகளை 15 முறை கத்தியால் குத்தி கொலை செய்த இந்திய பெண் !!

கொரோனா பயம்! 5 வயது மகளை 15 முறை கத்தியால் குத்தி கொலை செய்த இந்திய பெண் !!
X

இங்கிலாந்தில் கொரோனா அச்சத்தால் தான் பெற்ற 5 வயது மகளை 15 முறை கத்தியால் குத்திவிட்டு இந்திய பெண் ஒருவர் தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா என்னும் கொடிய தொற்று நோய் உலகம் முழுவதும் பரவி பெரும் ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் எதிர்பார்க்க முடியாத அளவுக்கு பல்வேறு பாதிப்பைகளை மக்கள் எதிர்கொள்கின்றனர். அந்த வகையில் இங்கிலாந்தில் நடந்த சம்பவம் அதிரச்செய்துள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த 36 வயதாகும் சுகந்தன் சிவானந்தம்- சுதா தம்பதியர் தங்களின் 5 வயது சயாகியுடன் லண்டனில் வசித்து வருகின்றனர். கடந்த ஆண்டு முதலே கொரோனா காரணமாக ஊரடங்கு, தனிமை என இருந்ததால் சுதாவிற்கு கடுமையான மன அழுத்தம் ஏற்பட்டிருக்கிறது. கொரோனா தொற்று ஏற்பட்டு அதனால் உயிரிழந்துவிடுவோம் என சுதா கடும் அச்சத்தில் இருந்துள்ளார்.

இதுவே அவர் கடுமையான முடிவு ஒன்றை எடுக்க வழிவகுத்ததாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் கணவர் வேலைக்காக வெளியே புறப்பட்ட போது அவரை வெளியே செல்ல வேண்டாம் என கெஞ்சியிருக்கிறார். இருப்பினும் கணவர் வெளியே சென்ற பின் அவருடைய நண்பர்களுக்கு கால் செய்து தனக்கு உடம்பு சரியில்லை என பேசியிருக்கிறார். இடைப்பட்ட நேரத்தில் அவருக்கு கொரோனா பயம் எகிறியிருக்கிறது.

எனினும் ஊரடங்கு காரணமாக அவரது நண்பர்கள் யாரும் வீட்டிற்கு செல்லவில்லை. இந்த நிலையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்போர் சுதாவின் கணவருக்கு போன் செய்து கூறிய தகவல் அவரை அதிர்ச்சி அடையச்செய்தது. உடனே வீட்டிற்கு சென்று பார்த்தப்போது அங்கு மனைவி சுதாவும், 5 வயது குழந்தையும் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தார்.

அவருடைய மனைவி உயிருக்கு போராடிய நிலையில், அவருடைய 5 வயது மகள் இறந்து கிடந்துள்ளார். பின்னர் மனைவியை மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார். கொரோனா பயத்தினால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் தன்னுடைய 5 வயது மகளை, சுதாவே கத்தியால் 15 முறை கத்தியால் குத்தி கொலை செய்ததும், அதன் பின்னர் அவரும் அவருடைய வயிற்றில் பல முறை குத்திக் கொண்டு தற்கொலைக்கு முயன்றதும் பின்னர் தெரியவந்தது. தான் எப்படியும் இறந்துவிடுவோம் என்பதால் தன்னுடைய மகளையும் அவர் கொலை செய்தது தெரியவந்தது.

தற்போது இந்த கொலை வழக்கில் இருந்து தன்னுடைய மனைவியை விடுவிக்க வேண்டும் என்றும், அவருக்கு மனநிலை சரியில்லாததன் காரணமாகவே இப்படியொரு முடிவை எடுத்திருந்ததாகவும், அவர் மட்டும் நல்ல நிலையில் இருந்திருந்தால் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றிருக்காது எனவும் அவருடைய கணவர் நீதிமன்றத்தில் முறையிட்டிருக்கிறார்.

சுதாவை பரிசோதித்த மனநல மருத்துவர் கொரோனா ஊரடங்கினால் சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தப்படும் நிலை ஏற்பட்டதில் சுதாவுக்கு தீவிர மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார். தற்போதும் சுதா மனநல சிகிச்சையில் இருந்து வருகிறார்.


newstm.in

Tags:
Next Story
Share it