கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பயம்.. வதந்தியால் ஆற்றில் குதித்த கிராம மக்கள் !!
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பயம்.. வதந்தியால் ஆற்றில் குதித்த கிராம மக்கள் !!

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பயந்துபோய் கிராம மக்கள் ஆற்றில் குதித்த விநோத சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு தீவிரமாக இருந்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த பல மாநிலங்களில் ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் தடுப்பூசி போடும் பணியும் விரைவைக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் உத்தரபிரதேசத்தில் ஒரு கிராமத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் பயந்துபோய் ஆற்றில் குதித்த சம்பவம் நடந்துள்ளது. உத்தர பிரதேசத்தின் பராபங்கி கிராமத்திற்கு அரசு அதிகாரிகள் தடுப்பூசி போடுவதற்காக சென்றுள்ளனர். ஆனால் விஷ ஊசி போட வருவதாக தகவல் பரவியதால் அந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் ஊசிக்கு பயந்து சரயு நதியில் விழுந்து தப்பித்துள்ளனர்.
இதுதொடர்பாக சம்பவ இடத்திற்கு சென்ற ராம்நகர் உட்கோட்ட ஆட்சியர் ராஜீவ் குமார் சுக்லா அப்பகுதி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தடுப்பூசியின் முக்கியத்துவத்தையும் நன்மைகளையும் கிராம மக்களுக்கு விளக்கிய பிறகும், 14 பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

இந்தியாவில் போலியோ தடுப்பு மருந்து குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் ஆரம்பத்தில் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. எனினும் அதன்பின்னர் பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். ஆனால் இதுபோன்ற நடவடிக்கைகளில் உத்தரபிரதேச அரசு மெத்தனம் காட்டி வருவதாகவும் இதனால் அப்பகுதி மக்கள் இன்னும் கொரோனா தடுப்பூசி குறித்து விரிப்புணர்வு இன்றி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், இன்றைய நவீன காலத்திலும் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு இல்லாமல் வதந்திகளை நம்பி மக்கள் கொரோனா தடுப்பூசி போடுவதை புறக்கணிப்பதை எதிர்கொண்டு வருகின்றனர் அதிகாரிகள்.
newstm.in

