மத்திய பட்ஜெட் இன்று தாக்கல்.. கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியாகுமா..?
மத்திய பட்ஜெட் இன்று தாக்கல்.. கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியாகுமா..?

நாடாளுமன்றத்தில் நேற்று (31-ம் தேதி) பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. அதன்படி, இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்தினார். இந்த உரையில் பல்வேறு துறைகளில் மத்திய அரசின் கூட்டுச் சாதனைகளை பட்டியலிட்டு அவர் பாராட்டினார்.
இந்நிலையில், 2022 - 2023-2-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காகிதமில்லா மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இது, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 4-வது பட்ஜெட் ஆகும்.
உத்தரபிரதேசம் உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளது. இதையொட்டி, வாக்காளர்களை கவர கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, வருமான வரி உச்சவரம்பு அதிகரிக்கப்படுமா, வரி சலுகைகள் அறிவிக்கப்படுமா..? என பல்வேறு எதிர்பார்ப்புகள் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட் குறித்து எழுந்துள்ளன.

