Theme Check

நாடு முழுவதும் மத்திய அரசு எச்சரிக்கை!

நாடு முழுவதும் மத்திய அரசு எச்சரிக்கை!

நாடு முழுவதும் மத்திய அரசு எச்சரிக்கை!
X

இந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த போதிலும் சில வாரங்களாக குறிப்பிட்ட மாநிலங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனையடுத்து கட்டுப்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 1.21 கோடி பேர். உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1.62 லட்சம் பேர். பரவல் அதிகரித்து வருவதை அடுத்து மத்திய சுகாதார செயலர் ராஜேஷ் பூஷன் மற்றும் நிதி அயோக் உறுப்பினர் விகே பால் இருவரும் இணைந்து கூட்டாக செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதன்படி 'இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 10 மாவட்டங்களில் 8 மகாராஷ்டிராவில் உள்ளன. இதைத்தவிர டெல்லி, பெங்களூருவில் பாதிப்பு அதிகமுள்ளது, தற்போது கொரோனா பாதிப்பு 'மோசம்' என்ற நிலையில் இருந்து 'மிகவும் மோசம்' என்ற நிலையை எட்டியுள்ளது. எந்த ஒரு மாநிலமும், மாவட்டமும், எந்த பகுதியும், உண்மையான ஆபத்தை உணர வேண்டும். பரவலைக் கட்டுப்படுத்தி, உயிர்களைக் காப்பாற்ற அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும் எனவும் மக்கள் இன்னும் கட்டுப்பாடுகளை மேற்கொள்ளத் தவறினால் பாதிப்புகள் இன்னும் அதிகரிக்கும். மக்கள் எச்சரிக்கையாக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags:
Next Story
Share it