முதுகலை நீட் தேர்வு தேதியை அறிவித்தது மத்திய அரசு !!
முதுகலை நீட் தேர்வு தேதியை அறிவித்தது மத்திய அரசு !!

முதுகலை மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு வரும் செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி நடத்தப்படும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளார்.
நீட் எனப்படும் இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் வரும் செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி நடத்தப்படும் என மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று அறிவித்திருந்தார். இதன்படி, நீட் தேர்வுக்கு இன்று முதல் மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.

இந்நிலையில், முதுகலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி நாடு முழுவதும் கொரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றி நடத்தப்படும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, சமூக வலைதளமான ட்விட்டரில் அறிவித்துள்ளார்.
இந்த தேர்வு ஏற்கனவே ஆகஸ்ட் மாதம் நடைபெறுவதாக இருந்து ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு 11 மொழிகளில் நடைபெற உள்ளது. அவை ஆங்கிலம், இந்தி, அச்சாமிய மொழி, வங்க மொழி, குஜராத்தி, கன்னடம், மராத்தி, ஒரியா, தமிழ், தெலுங்கு மற்றும் உருது ஆகிய மொழிகள் ஆகும்.
We have decided to conduct #NEET Postgraduate exam on 11th September, 2021.
— Mansukh Mandaviya (@mansukhmandviya) July 13, 2021
My best wishes to young medical aspirants!
newstm.in

