கொரோனா விஷயத்தில் மத்திய அரசு தோல்வி! தேர்தல் சமயத்தில் சுயநினைவுக்கு வந்த ப.சிதம்பரம்!
கொரோனா விஷயத்தில் மத்திய அரசு தோல்வி! தேர்தல் சமயத்தில் சுயநினைவுக்கு வந்த ப.சிதம்பரம்!

இந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகள் மத்திய மாநில அரசுகளால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இருந்த போதிலும் சில வாரங்களாக நாட்டில் பல்வேறு மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. இது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அவருடைய ட்விட்டர் பதிவில் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்தியாவில் சமீபமாக ஒவ்வொரு நாளும் கொரோனா நோய்த்தொற்றின் விகிதம் மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்தியா வெளிநாடுகளுக்கு இதுவரை 5.9 கோடி கொரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்துள்ளது .ஆனால், இந்தியர்களுக்கு இதுவரை 3 கோடி கொரோனா தடுப்பூசிகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்பதில் ஏமாற்றமடைகிறேன்.தற்போதைய சூழலில் கொரோனாவிற்கும், தடுப்பூசிக்கும் நடுவில் உள்ள போட்டியில் கொரோனா தான் மக்களை வென்று வருகிறது.மக்களின் தேவைக்கேற்ப மத்திய அரசு கொரோனா தடுப்பூசிகளைப் போட முன்வர வேண்டும். கொரோனா தடுப்பூசிக்காக முன்பதிவு செய்வது போன்ற தடைகளை விலக்கி இந்தியாவின் கடைக்கோடி குடிமகனுக்கும் சென்று சேரும் வழியை அரசாங்கம் உருவாக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

தேர்தல் நேரத்தில் மட்டும் நம்ம ஊரு அரசியல்வாதிகளுக்கு சுயநினைவு வந்துடுது. இத்தனை நாட்களா நீங்க இருக்கிற தமிழகத்துலேயே எத்தனையோ பிரச்சனைகள் வந்ததே... அப்போ எல்லாம் வாயத் தொறக்காம இதெல்லாம் தேவையா? என்று அந்த ட்விட்டர் பதிவிற்கு எதிர் கருத்து சொல்லி வருகிறார்கள் இணைய போராளிகள்!

