Theme Check

பெண் எஸ்.ஐ. விஷம் குடிக்க இதுதான் காரணமா? கசியும் அதிர்ச்சி தகவல்!!

பெண் எஸ்.ஐ. விஷம் குடிக்க இதுதான் காரணமா? கசியும் அதிர்ச்சி தகவல்!!

பெண் எஸ்.ஐ. விஷம் குடிக்க இதுதான் காரணமா? கசியும் அதிர்ச்சி தகவல்!!
X

அரியலூரில் பெண் காவல் உதவி ஆய்வாளர் விஷமருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதற்கான காரணம் குறித்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அரியலூர் நகர காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் லட்சுமி பிரியா (30), கடந்த 5ஆம் தேதி முதல் 3 நாள் விடுப்பு எடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் விடுப்பு எடுக்கப்போவதை லட்சுமி பிரியா உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

எனவே விடுப்புமுடிந்து பணிக்கு வந்தபோது லட்சுமி பிரியா அலைக்கழிக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும், அவரை திருச்சியில் உள்ள தற்காலிக காவலர்பயிற்சி பள்ளிக்கு மாற்றியுள்ளனர். இதனால் லட்சுமி பிரியா செடி கருகும் பூச்சி மருந்தை தண்ணீரில் கலந்து குடித்துவிட்டு மயங்கி விழுந்தார்.

suicide

உயிருக்கு ஆபத்தான நிலையில் அரியலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். லட்சுமி பிரியாவின் உடல்நிலை மோசமடைந்ததையடுத்து, திருச்சி கேஎம்சியில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

இதற்கிடையே மாவட்ட நீதிபதி மருத்துவமனைக்கு சென்று லட்சுமி பிரியாவிடம் வாக்குமூலம் பதிவு செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. விடுப்புக்கு பிறகு பணிக்கு சென்ற லட்சுமி பிரியா எஸ்பி ஆபிஸுக்கும், டிஎஸ்பி ஆபிஸுக்கும் அலைக்கழிக்கப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் அவர் பாலியல் தொல்லைக்கு ஆளானதாகவும் அதிர்ச்சி தகவல் கசிந்துள்ளது. தற்போது தீவிர சிகிச்சை பெற்று வரும் லட்சுமி பிரியா சற்று குணமடைந்தால் அனைத்து கேள்விகளுக்கும் விடை கிடைத்துவிடும்.

newstm.in

Next Story
Share it