Theme Check

கொரோனா 3வது அலை ஏற்பட்டால்… நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு..!

கொரோனா 3வது அலை ஏற்பட்டால்… நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு..!

கொரோனா 3வது அலை ஏற்பட்டால்… நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு..!
X

இந்திய உலகளாவிய கூட்டமைப்பின் கூட்டம் காணொலி வாயிலாக நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: “கொரோனா 3வது அலையை மக்கள் யாரும் விரும்பவில்லை.

ஒருவேளை 3வது அலை ஏற்பட்டால், அதை எதிர்கொள்ளவும், சமாளிக்கவும் இந்திய மருத்துவத்துறையின் உள்கட்டமைப்பு சிறப்பாகத் தயாராகியுள்ளது. அதில் கூடுதலான கவனத்தை அரசு செலுத்தியுள்ளது. மெட்ரோ நகரங்களில் மட்டுமல்லாமல், 2ம் வகை, 3ம் வகை நகரங்களிலும் மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளோம்.

நாள்தோறும் 45 லட்சம் முதல் 50 லட்சம் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 33 கோடி மக்கள் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். தடுப்பூசி செலுத்தும் பணி நகர்ந்து வருவதைப் பார்க்கும்போது, தொற்றால் எளிதாகப் பாதிக்கப்படும் மக்களுக்கு விரைவாக தடுப்பூசி செலுத்தி கொரோனாவிலிருந்து காக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார்.

Tags:
Next Story
Share it