Theme Check

விவசாயிகளுக்கான நிதியுதவி – ஆட்சியர் அவசர உத்தரவு!!

விவசாயிகளுக்கான நிதியுதவி – ஆட்சியர் அவசர உத்தரவு!!

விவசாயிகளுக்கான நிதியுதவி – ஆட்சியர் அவசர உத்தரவு!!
X

பிரதம மந்திரி கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் ஊக்கத் தொகையை தொடர்ந்து பெறுவதற்கு, வங்கிக் கணக்குடன் ஆதார் கணக்கை உடனடியாக இணையுங்கள் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் (PM KISAN) கீழ் தகுதியுள்ள விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2,000 வீதம் ஆண்டிற்கு ரூ.6,000 வீதம் ஊக்கத்தொகை வரவு வைக்கப்பட்டுறது.

kisan money

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் மூலம் இதுவரை 10 முறை விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் ஆதார் எண்ணை அடிப்படையாகக் கொண்டு ஊக்கத்தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

farmer mobile

எனவே, மதுரை மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்றுவரும் விவசாயிகள் தங்களின் ஆதார் விவரங்களை pmkisan.tn.gov.in என்ற இணையதளத்தில் புதுப்பிக்கவும் மற்றும் தங்களின் பி.எம் - கிசான் வங்கி கணக்கில் ஆதார் எண்ணை 31-3-2022-க்குள் தவறாது இணைத்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் அனிஷ் சேகர் தெரிவித்துள்ளார்.

newstm.in

Next Story
Share it