Theme Check

அரசுக்கு நிதிச்சுமை.. முன்னாள் எம்எல்ஏக்களின் பென்ஷன் குறைப்பு.. முதல்வர் அதிரடி..!

அரசுக்கு நிதிச்சுமை.. முன்னாள் எம்எல்ஏக்களின் பென்ஷன் குறைப்பு.. முதல்வர் அதிரடி..!

அரசுக்கு நிதிச்சுமை.. முன்னாள் எம்எல்ஏக்களின் பென்ஷன் குறைப்பு.. முதல்வர் அதிரடி..!
X

பஞ்சாப் மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து, அக்கட்சியின் பகவந்த் மான் முதல்வராக பொறுப்பேற்றார்.

இந்நிலையில் அவர் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது: “பஞ்சாப்பில் உள்ள முன்னாள் எம்எல்ஏக்கள், எத்தனை முறை வெற்றி பெற்றிருந்தாலும் அவர்களுக்கு இனி ஒரு முறை எம்எல்ஏவாக இருந்ததற்கான ஓய்வூதியம் (பென்ஷன்) மட்டுமே வழங்கப்படும்.
Bhagwant Mann Oath: Bhagwant Mann's First Speech As Punjab Chief Minister:  10 Points
சில முன்னாள் எம்எல்ஏக்கள் பென்ஷனாக ரூ.5.25 லட்சம் வரை பெறுகின்றனர். அவர்களுக்கான குடும்ப ஓய்வூதியமும் குறைக்கப்படும்.

எம்எல்ஏக்கள் உட்பட நமது அரசியல் தலைவர்கள் தேர்தலின்போது மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என கைக்கூப்பி ஓட்டு கேட்டு வெற்றி பெறுகின்றனர்.

அதுவே, 2, 3 முறை வெற்றி பெற்றாலோ, தோல்வி அடைந்தாலோ தேர்தலில் சீட் கிடைக்காத எம்எல்ஏக்களோ அவர்கள் லட்சக்கணக்கில் பென்ஷன் பெறுகிறார்கள்.

ஒரு சிலர் எம்எல்ஏவாக இருந்து பின்னர் எம்பியாக வெற்றி பெற்றாலும் அவர்களும் பென்ஷன் வாங்குகின்றனர். இதனால், கோடிக்கணக்கான ரூபாய் நிதிச்சுமை ஏற்படுகிறது.

இனி, இந்த வகையில் சேமிக்கப்படும் பணம், பஞ்சாப் மக்களின் நலனுக்காக பயன்படுத்தப்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Next Story
Share it