Theme Check

முன்விரோதம் காரணமாக ஃபைனான்சியர் வெட்டிக்கொலை!!

முன்விரோதம் காரணமாக ஃபைனான்சியர் வெட்டிக்கொலை!!

முன்விரோதம் காரணமாக ஃபைனான்சியர் வெட்டிக்கொலை!!
X

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் முன்விரோதம் காரணமாக ஃபைனான்சியர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்திவாடி பகுதியை சேர்ந்த உதயகுமார் (33) ஃபைனான்ஸ் தொழில் செய்து வந்தார். அவர் மதுபோதையில் வீட்டிற்கு அருகில் நின்று செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது வீட்டின் எதிரில் இருந்த சாலையை கடந்து மறுபுறம் சென்றுள்ளார்.

அப்போது அவரை பின் தொடர்ந்து சென்ற மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தனர். உதயகுமாரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து உதயகுமாரின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

hosur murder

முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட உதயகுமார், அதேபகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவரை கொலை செய்ய முயன்றதாக, அவர் மீது மத்திகிரி காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு உள்ளது.

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் உதயகுமார் அவரது வார்டில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வெற்றி பெற செய்துள்ளார்.எனவே இந்த கொலை உள்ளாட்சி தேர்தல் போட்டி காரணமாக ஏற்பட்டதா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

அல்லது பழைய முன் விரோதம் காரணமாக நடந்ததா என்பது குறித்து மத்திகிரி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it