Theme Check

தெரிந்துகொள்ளுங்கள்.. ஜனவரி மாதத்தில் மட்டுமே இத்தனை விடுமுறை நாட்களா !!

தெரிந்துகொள்ளுங்கள்.. ஜனவரி மாதத்தில் மட்டுமே இத்தனை விடுமுறை நாட்களா !!

தெரிந்துகொள்ளுங்கள்.. ஜனவரி மாதத்தில் மட்டுமே இத்தனை விடுமுறை நாட்களா !!
X

2020, 2021ஆம் ஆண்டுகளில் மக்கள் பட்ட கஷ்டத்தை எளிதில் சொல்விட முடியாது. அந்த அளவுக்கு இந்த கொரோனா பாடாய் படுத்தியுள்ளது. இந்த நிலையில், 2022 புத்தாண்டு வருவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்த புதிய ஆண்டாவது மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி விடுவோமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

ஆனால் இந்த ஒமைக்ரான் இன்னும் தனது ஆட்டத்தை இந்தியாவில் ஆரம்பிக்கவில்லை என்பதால் கவலையில் உள்ளனர். இதனால் 2022ஆம் ஆண்டும் இதே கதிதானா என உள்ளனர். வரும் ஜனவரி மாதத்தில் பண்டிகைகள் வேற அதிகம் உள்ளது.

pud
அதாவது, வருகிற புத்தாண்டின் ஜனவரி மாதத்தில் வரும் பொது விடுமுறைகளும், பண்டிகைக்கால விடுமுறைகள் பற்றியும் காணலாம். பண்டிகை கால விடுமுறை ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபடலாம் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

* ஜனவரி 1ம் தேதி - சனிக்கிழமை : புத்தாண்டு தினம். நாடு முழுவதும் விடுமுறை.

* ஜனவரி 2ம் தேதி - ஞாயிற்றுகிழமை: மன்னம் ஜெயந்தி. கேரள பண்டிகை.

* ஜனவரி 9ம் தேதி - ஞாயிற்றுகிழமை : சண்டிகர், ஹரியானாவில் குரு கோவிந்த் சிங் ஜெயந்தி கொண்டாடப்படும்.

* ஜனவரி 11ம் தேதி - செவ்வாய்கிழமை: மிஷனரி தினம். மிசோரம் மாநிலத்தில் விடுமுறை.

* ஜனவரி 12ம் தேதி - புதன்கிழமை: மேற்கு வங்கத்தில் சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி கொண்டாடப்படும்.

* ஜனவரி 14ம் தேதி - வெள்ளிக்கிழமை: மக் பிகு, மகர சங்கராந்தி, துசு பூஜை. இந்த பண்டிகை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது.

* ஜனவரி 14ம் தேதி - வெள்ளிக்கிழமை: தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை.

* ஜனவரி 15ம் தேதி - சனிக்கிழமை: பொங்கல் பண்டிகை/ திருவள்ளுவர் தினம். தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேச மாநிலங்களில் கொண்டாடப்படும்.

* ஜனவரி 16ம் தேதி - ஞாயிற்றுகிழமை: கனும பண்டிகை, உழவர் திருநாள். ஆந்திரப் பிரதேசம், பாண்டிச்சேரி மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் கொண்டாடப்படும்.

* ஜனவரி 23ம் தேதி - ஞாயிற்றுக்கிழமை: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஜெயந்தி மேற்கு வங்காளம், திரிபுரா, ஒடிசா மற்றும் அசாம் மாநிலங்களில் விடுமுறை.

* ஜனவரி 25ம் தேதி - செவ்வாய்கிழமை: இமாச்சல பிரதேசத்தில் மாநில தினம்

* ஜனவரி 26ம் தேதி - புதன்கிழமை: குடியரசு தினம். பொது விடுமுறை.

* ஜனவரி 31ம் தேதி - திங்கட்கிழமை: மீ-டேம்-மீ-ஃபை. அசாம் மாநிலத்தில் கொண்டாடப்படும்.

newstm.in

Next Story
Share it