Theme Check

பெரம்பூர் ரயில்வே பணிமனையில் தீ விபத்து!!

பெரம்பூர் ரயில்வே பணிமனையில் தீ விபத்து!!

பெரம்பூர் ரயில்வே பணிமனையில் தீ விபத்து!!
X

சென்னை பெரம்பூர் ரயில்வே பணிமனையில் தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை பெரம்பூரில் ஐசிஎஃப் எனப்படும் ரயில்வே பணிமனை செயல்பட்டு வருகிறது. ரயில்கள் பராமரிப்பு பணிகள், பழுது பார்க்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் ரயில்வே ஊழியர்கள் சரக்கு ரயில் ஒன்றில் ஆயில் டேங்கை சுத்தம் செய்தனர்.

ஆயில் டேங்கில் வெல்டிங் வைக்கும் பணி நடைபெற்றது. அப்போது திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீ கொழுந்து விட்டு எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

icf 1

பணியில் இருந்த ஊழியர்கள் ஒரு மணி நேரம் போராடி அங்கே இருந்த தீயணைப்பு உபகரணங்களை கொண்டு வந்து தீயை அணைத்தனர். ஊழியர்கள் கவனமாக இருந்ததால் வேறு எந்தவித அசம்பாவித சம்பவமும் நடைபெறவில்லை.

தீவிபத்து தொடர்பாக ஐசிஎஃப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரயில்வே அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it