Theme Check

பட்டாசு ஆலைகள் செயல்படலாம்.. ஆனால், கலெக்டர் போட்ட 2 கண்டிஷன்..!

பட்டாசு ஆலைகள் செயல்படலாம்.. ஆனால், கலெக்டர் போட்ட 2 கண்டிஷன்..!

பட்டாசு ஆலைகள் செயல்படலாம்.. ஆனால், கலெக்டர் போட்ட 2 கண்டிஷன்..!
X

“இரவு நேரத்தில் பட்டாசு ஆலைகள் இயங்கினால் ஆலையின் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும்” என, விருதுநகர் மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில், சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக மாவட்டத்தில் உள்ள 179 ஆலைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், உரிமம் ரத்து செய்யப்பட்ட 179 பட்டாசு ஆலைகளில் 161 பட்டாசு ஆலைகள் மீண்டும் செயல்பட விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி இன்று அனுமதி அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “தொழிலாளர்களின் நலன் கருதி இந்த ஆலைகள் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால், இரவு நேரத்தில் பட்டாசு ஆலைகள் இயங்கினாலும், குழந்தைத் தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தினாலும் ஆலையின் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும்” என்று தெரிவித்தார்.

Next Story
Share it