டெல்லியில் போலீசார் மீது துப்பாக்கிச் சூடு! தீ வைப்பு! பயங்கர மோதல்!! 

மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்தியவர்களுக்கும், சி.ஏ.ஏ. ஆதரவாளர்களுக்கும் இடையே இன்று பிற்பகல் பயங்கர மோதல் வெடித்துள்ளது. இந்த பயங்கர மோதலில், அந்த பகுதியில் இருந்த வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன. போலீசார் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

டெல்லியில் போலீசார் மீது துப்பாக்கிச் சூடு! தீ வைப்பு! பயங்கர மோதல்!! 
X

மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்தியவர்களுக்கும், சி.ஏ.ஏ. ஆதரவாளர்களுக்கும் இடையே இன்று பிற்பகல் பயங்கர மோதல் வெடித்துள்ளது. இந்த பயங்கர மோதலில், அந்த பகுதியில் இருந்த வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன. போலீசார் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் போலீசார் மீது துப்பாக்கிச் சூடு! தீ வைப்பு! பயங்கர மோதல்!!

டெல்லி உட்பட நாட்டின் பல பகுதிகளில் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பல மாநிலங்களில் அமைதியான முறையில் எதிர்ப்பு போராட்டங்கள் நடைப்பெற்று வந்தாலும், டெல்லி மாணவர்கள், சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டங்களை நடத்திய போது சி.ஏ.ஏ. ஆதரவாளர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனையும் மீறி டெல்லியின் ஷாகீன் பாக் பகுதியில் தொடர்ந்து கடந்த இரண்டு மாதங்களாக போராட்டம் நடைபெற்றது.

டெல்லியில் போலீசார் மீது துப்பாக்கிச் சூடு! தீ வைப்பு! பயங்கர மோதல்!!

இதனிடையே இன்று டெல்லி ஜாபராபாத் பகுதியில் போராட்டம் நடைப்பெற்ற போது, சி.ஏ.ஏ. ஆதரவாளர்களும் அந்த பகுதியில் குவிந்ததால் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறையில், அந்தப் பகுதியில் இருந்த வாகனங்களுக்குத் தீ வைக்கப்பட்டன. மேலும் போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த வன்முறையைஅத் தொடர்ந்து, அனைத்து தரப்பினரும் அமைதி காக்க வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்த வன்முறைகளைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கெஜ்ரிவால் கேட்டுக் கொண்டுள்ளார்.

newstm.in

Tags:
Next Story
Share it