Theme Check

இன்று முதல் இரவு ஊரடங்கு – அரசு அதிரடி அறிவிப்பு!!

இன்று முதல் இரவு ஊரடங்கு – அரசு அதிரடி அறிவிப்பு!!

இன்று முதல் இரவு ஊரடங்கு – அரசு அதிரடி அறிவிப்பு!!
X

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அசாம் மாநிலத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

ஒமைக்ரான் வைரஸ் டெல்டா வகையை விட ஆபத்தானது என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதால், தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும்படி, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

இந்நிலையில், வடகிழக்கு மாநிலமான அசாம் மாநிலத்தில், ஒமைக்ரான் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

Assam-lockdown

இது தொடர்பாக அசாம் மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இரவு 11:30 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் வரும் 31 ஆம் தேதி அன்று இரவு நேர ஊரடங்கு நடைமுறையில் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள், ஹோட்டல்கள், சாலையோர உணவகங்கள், ஷோரூம்கள், குளிர்பதனக் கிடங்குகள் மற்றும் கிடங்குகள், மளிகைப் பொருட்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யும் கடைகள், பாலகங்கள், இரவு 10:30 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.

night

திரையரங்குகளில் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும். பொது இடங்களில் முகக் கவசம் அணியாத நபர்களுக்கு 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

மஹாராஷ்டிரா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், ஹரியானா ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து அசாம் மாநிலத்திலும் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Next Story
Share it