கொரோனா குறைந்ததால் இன்று முதல் அனுமதி.. மக்கள் உற்சாகம் !
கொரோனா குறைந்ததால் இன்று முதல் அனுமதி.. மக்கள் உற்சாகம் !

கொரோனா தடுப்பு பொது முடக்கம் காரணமாக கடந்த 8 மாதங்களாக திற்பரப்பு அருவி மூடப்பட்டிருந்தது. மேலும் அவ்வப்போது பெய்த தொடர் கனமழையால் திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் திற்பரப்பு அருவியில் மக்கள் குளிக்க அனுமதிக்க முடியாத சூழல் நிலவியது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்த நிலையில், கொரோனா குறைந்த நிலையில் மழையும் குறைந்து அருவியில் வழக்கமான அளவில் நீர் பாய்ந்து விழுகிறது. இதனால் திற்பரப்பு அருவியில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து நேற்று அருவியில் குளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அருவி பகுதியில் பாசி பிடித்து வழுக்கும் நிலையில் இருந்த இடங்கள் மற்றும் சுற்றுப்புறங்கள் தூய்மைப்படுத்தப்பட்டன. கொரோனா விதிமுறைகளை பின்பற்றி சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கலாம் என்றும் அங்குள்ள கடைகளில் சானிட்டைசர்கள் வைத்திருக்க வேண்டும், கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுற்றுலாப்பயணிகள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் உள்ளிட்ட கொரோனா விதிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என ஆட்சியர் அரவிந்த் தெரிவித்துள்ளார்
இன்று முதல் திற்பரப்பு அருவியில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டிருப்பது சுற்றுலா பயணிகளுக்கும், திற்பரப்பில் கடை நடத்தி வரும் வியாபாரிகளுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
newstm.in

