Theme Check

மீன் விலை பல மடங்கு உயர்வு..!! வஞ்சிரம் மீன் விலை ரூ.2500 ஆக அதிகரிப்பு..!!

மீன் விலை பல மடங்கு உயர்வு..!! வஞ்சிரம் மீன் விலை ரூ.2500 ஆக அதிகரிப்பு..!!

மீன் விலை பல மடங்கு உயர்வு..!! வஞ்சிரம் மீன் விலை ரூ.2500 ஆக அதிகரிப்பு..!!
X

மீன்பிடி தடைகாலம் அமலில் உள்ளதால் குறைந்த அளவு தூரம் சென்று மீன் பிடிக்கும் பைபர் படகுகளில் மட்டுமே மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்களை பிடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். விசைப்படகுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த மீன்பிடி தடைகாலம் ஜூன் 14 ந்தேதி நிறைவடைகிறது.மேலும் கடந்த வாரம் அசானி புயல் எச்சரிக்கை காரணமாக கடலில் அலை சீற்றமாக காணப்பட்டது. இதன் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

இந்நிலையில் மீன் வரத்து குறைந்ததால் மக்கள் அதிகமாக விரும்பி சாப்பிடக்கூடிய வஞ்சிரம், வவ்வால் போன்ற மீன்கள் விலை இரு மடங்காக விற்பனை செய்யப்படுகிறது.

சிறிய வகை வஞ்சிரம் 650 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ரூ.1200 ஆக விற்பனை செய்யப்படுகிறது. பெரிய வகை வஞ்சிரம் 1,100 ரூபாய்க்கு விற்கப்பட்டவை 2500 வரை விற்கப்படுகிறது. சங்கரா 300 ரூபாயிலிருந்து 700 ரூபாய், நெத்திலி 350 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டவை 750 ரூபாய், வவ்வால் 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டவை 1100 ரூபாய், கடம்பா 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டவை 900 ரூபாய், இறால் 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டவை 800 ரூபாய், பாறை 550 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டவை 1000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

நண்டு 350 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டவை ரூ.750, கொடுவா 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டவை 800 ரூபாய்க்கும், கிழங்கா 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டவை 900 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மீன் வரத்து குறைந்ததன் தொடர்ச்சியாக மீன் மற்றும் இறால் உள்ளிட்டவைகளின் விலை அதிகரிப்பால் சாமான்ய மக்கள் மீன்களை வாங்க முடியாத நிலை உள்ளதாக கவலை தெரிவித்தனர்.

Next Story
Share it