Theme Check

நெகிழ்ச்சி! கொரோனாவால் இறந்தவர்களை எரிக்க நிலத்தை தானமாக கொடுத்த விவசாயி!

நெகிழ்ச்சி! கொரோனாவால் இறந்தவர்களை எரிக்க நிலத்தை தானமாக கொடுத்த விவசாயி!

நெகிழ்ச்சி! கொரோனாவால் இறந்தவர்களை எரிக்க நிலத்தை தானமாக கொடுத்த விவசாயி!
X

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் உடலை எரிக்க விவசாயி ஒருவர் தன்னுடைய நிலத்தை கொடுத்துள்ளார்.

கொரோனா 2வது அலையால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கடுமையான நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. அதிலும் மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் இல்லாததால் பலர் சிகிச்சை பெறமுடியாமல் உயிரை இழந்து வருகின்றனர்.

இறந்தவரின் சடலங்களை தகனம் செய்யவோ, புதைப்பதற்கோ இடமில்லாமல் பல நகரங்களில் மக்கள் தவிக்கின்றனர். இறந்தவரை தகனம் செய்வதற்காக சுடுகாட்டில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கும் அவல நிலை எங்கும் காணப்படுகிறது.



இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் சுஷில் குமார் என்ற விவசாயி இறந்தவர்களின் உடலை எரிப்பதற்காக தனது விவசாய நிலத்தை நன்கொடையாக வழங்கினார். இவர் நன்கொடையாக வழங்கிய நிலத்தில் தற்போது இறுதிச் சடங்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த நிலத்தில் 10 தகன மேடைகள் அமைக்கும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது. தகனம் செய்வதற்காக கோடி ரூபாய் மதிப்புள்ள விவசாய நிலங்களை நன்கொடையாக வழங்கிய முதல் நபர் சுஷில் குமார் என்பதால் மாவட்ட ஆட்சியர் மற்றும் பொதுமக்கள் அவரை வெகுவாக பாராட்டி உள்ளனர்.

Tags:
Next Story
Share it