நெகிழ்ச்சி சம்பவம்! மோப்ப நாய்க்கு சிலை வைத்த போலீஸ்!!
நெகிழ்ச்சி சம்பவம்! மோப்ப நாய்க்கு சிலை வைத்த போலீஸ்!!

மறைந்த மோப்ப நாய்க்கு காவல்துறையினர் சிலை வைத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் போலீசார் தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த டிங்கி என்ற மோப்ப நாய்க்கு சிலை வைத்துள்ளனர். இந்த நாய் 49 வழக்குகளில் காவல்துறையினருக்கு உதவி செய்துள்ளது.
மோப்ப நாய் காவல்துறையினருக்கு பெரிய அளவில் உதவி செய்யக்கூடியவை. வழக்கின் பெரிய முடிச்சுகள் மோப்ப நாய்களால் அவிழக்கூடிய சூழல் கூட உருவாகி இருக்கிறது.

டிங்கி என்ற இந்த மோப்ப நாய் கடந்த வருடம் இறந்தது. ஜெர்மன் செப்பேர்ட் வகை நாயான டிங்கியின் சிலையை உருவாக்கி அதனை பராமரித்து வந்த சுனில்குமார் மரியாதை செலுத்தியுள்ளார்.
இந்த தகவல்களையும், புகைப்படத்தையும் ஐபிஎஸ் அதிகாரி அபிஷேக் யாதவ் பகிர்ந்துள்ளார். சுனில்குமாரின் அன்புக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
newstm.in
Tags:
Next Story

