Theme Check

ஒரேயொரு பயணியுடன் பஞ்சாப் டூ துபாய் பறந்த விமானம் ! மகாராஜாவான தொழிலதிபர் !!

ஒரேயொரு பயணியுடன் பஞ்சாப் டூ துபாய் பறந்த விமானம் ! மகாராஜாவான தொழிலதிபர் !!

ஒரேயொரு பயணியுடன் பஞ்சாப் டூ துபாய் பறந்த விமானம் ! மகாராஜாவான தொழிலதிபர் !!
X

கொரோனா வைரஸின் 2ஆவது அலை உலக நாடுகளை மீண்டும் ஆட்டம் காணச் செய்துள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் விமான சேவையை ரத்து செய்துள்ளது. அல்லது கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதேநேரத்தில் ஒருசில நாடுகள் விமான சேவைக்கு அனுமதி அளித்துள்ளது. ஆனால் விமானங்களில் பயணிகள் போக்குவரத்து என்பது பெரியளவில் பெருமளவில் சரிந்துள்ளது.

அந்த வகையில் இந்தியாவில் இருந்து துபாய்க்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் முன்பைபோல் அல்லாமல் பயணிகள் வரத்து என்பது மிகக்குறைந்த அளவே உள்ளது. இதில் புதிய உச்சமாக இந்தியாவில் இருந்து துபாய்க்கு ஒரு பயணியுடன் மட்டும் ஒரு விமானம் பறந்துசென்றது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் தொழிலதிபர் ஒருவர் தன்னந்தனியாக துபாய்க்கு பறந்துள்ளார்.

பஞ்சாப்பைச் சேர்ந்த எஸ்.பி.சிங் ஓபராய் என்ற தொழிலதிபர் தான் துபாய்க்கு செல்ல விமானத்தில் முன்பதிவு செய்துள்ளார். அவர் விமானத்தில் ஏறியப்போது தான் தெரிந்தது தான் மட்டுமே அந்த விமானத்தில் பயணிக்க இருப்பது. இது குறித்து அவர் கூறுகையில், விமானத்தில் ஏறியதும், தான் மட்டுமே இருப்பதை அறிந்து ஆச்சரியம் அடைந்தார். முதலில் ஒரு ராஜா போன்று உணர்ந்ததாக தெரிவித்த அவர், சக பயணிகள் இல்லாததால் தனக்கு சளிப்பு ஏற்பட்டதாகவும் கூறினார்.

இதனிடையே, ஒருவர் மட்டுமே துபாய்க்கு செல்ல டிக்கெட் பெற்றதால் அவரது பயண டிக்கெட்டை ரத்து செய்ய ஏர் இந்தியா முடிவு செய்தது. ஆனால், மத்திய விமானப் போக்குவரத்து துறையின் தலையிட்டால் அவரை மட்டுமே அழைத்துக் கொண்டு ஏர் இந்தியா விமானம் துபாய் பறந்துள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it