Theme Check

பறக்கும் உணவகம்... 160 அடி உயரத்தில் அமர்ந்து சாப்பிடலாம்!! VIDEO

பறக்கும் உணவகம்... 160 அடி உயரத்தில் அமர்ந்து சாப்பிடலாம்!! VIDEO

பறக்கும் உணவகம்... 160 அடி உயரத்தில் அமர்ந்து சாப்பிடலாம்!! VIDEO
X

இமாச்சல பிரதேசத்தில் உள்ள மணாலியில் முதன்முறையாக பறக்கும் உணவகம் திறக்கப்பட்டுள்ளது.

160 அடிக்கும் மேலான உயரத்தில் தொங்கும் இந்த உணவகம் கிரேன் உதவியுடன் அந்தரத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த உணவகத்தில் ஒரே நேரத்தில் 22 பேர் வரை உண்ணலாம்.

உலகின் மிக உயரமான பறக்கும் உணவகமாக இது கருதப்படுகிறது. 360 டிகிரி சுழலும் 24 இருக்கைகள் கொண்ட ஒரு பெரிய மேசை கிரேன் உதவியுடன் தரையிலிருந்து 160 அடி உயரத்திற்கு மேலே தூக்கப்படுகிறது.

flying restaurant

அனைத்து விருந்தினர்களும் சீட் பெல்ட்களை அணிந்திருப்பது கட்டாயம். சுற்றுலாப் பயணிகள் தொங்கும் சாப்பாட்டு மேசையில் உணவை ரசிப்பது மட்டுமல்லாமல், உயரத்தில் இருந்து முழு மணாலி நகரின் அழகிய காட்சிகளை ரசிக்கலாம்.

இரண்டு மதிய உணவு, ஒரு சூரியன் மறையும் நேரத்தில் மாலை உணவு மற்றும் இரண்டு இரவு உணவு என ஒவ்வொன்றும் 45 நிமிடங்களுக்கு உணவு கிடைக்கும். ஐந்து அமர்வுகளில் ஏதேனும் ஒன்றில் இருக்கை அல்லது முழுமையான டேபிளை பதிவு செய்யலாம்.

" style="border: 0px; overflow: hidden"" title="YouTube video player" width="560">

இந்த அனுபவத்திற்காக ஒவ்வொரு நபருக்கும் ரூ.3,999 வசூலிக்கப்படுகிறது. ஒன்பது கோடி ரூபாய் மதிப்பிலான இந்தத் திட்டம் திறக்கப்பட்ட உடனேயே அமோக வரவேற்பைப் பெற்று வருவதாக உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

newstm.in

Next Story
Share it