Theme Check

பத்மா சேஷாத்ரியைத் தொடர்ந்து மகரிஷி வித்யா மந்திர் பள்ளியிலும் பாலியல் தொல்லை! அதிர வைத்த மாணவி!

பத்மா சேஷாத்ரியைத் தொடர்ந்து மகரிஷி வித்யா மந்திர் பள்ளியிலும் பாலியல் தொல்லை! அதிர வைத்த மாணவி!

பத்மா சேஷாத்ரியைத் தொடர்ந்து மகரிஷி வித்யா மந்திர் பள்ளியிலும் பாலியல் தொல்லை! அதிர வைத்த மாணவி!
X

சென்னை சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் படித்த மாணவி ஒருவர் தனது ஆசிரியர் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார். இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கே.கே.நகர் பத்மா சேஷாத்ரி பள்ளியின் பாலியல் புகார் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அப்பள்ளி ஆசிரியர் ராஜகோபால் மாணவிகளுக்கு பாலியல் ரீதியான நோக்கத்தில் குறுஞ்செய்தி அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அங்கு பயின்ற மாணவிகளிடம் தவறாகப் பேசியது, தீய நோக்கத்துடன் தொடுதலில் ஈடுபட்டது, ஆன்லைன் வகுப்புகளில் அறைகுறை ஆடை அணிந்து வந்தது என இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

அதனைத் தொடர்ந்து போலீஸார் ஆசிரியர் ராஜகோபாலை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் பள்ளியில் இதே போன்ற செயலில் ஈடுபட்டுவரும் மேலும் சிலர் இருப்பதாக கூறினார் என்று அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது.


இந்நிலையில் சென்னையில் மேலும் ஒரு மாணவி ஆசிரியர் மீது பாலியல் புகார் அளித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். சென்னை சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் படித்த மாணவி ஒருவர் தனது ஆசிரியர் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.

அவர் தனது வணிகவியல் ஆசிரியர் ஆனந்த் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவரது இந்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it