சூர்யாவை தொடர்ந்து நடிகர் கார்த்தியும் மத்திய அரசுக்கு கடும் எதிர்ப்பு !!
சூர்யாவை தொடர்ந்து நடிகர் கார்த்தியும் மத்திய அரசுக்கு கடும் எதிர்ப்பு !!

மத்திய அரசு ஒளிப்பதிவு திருத்த சட்டத்தை 2021 கொண்டு வர உள்ளது. இதற்கு திரை உலகினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தமிழ் திரைத்துறையினரும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்னறர். நடிகர் சூர்யா இச்சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டார். சட்டம் மக்களை காக்கவேண்டும், குரல்வளையை நெரிக்கக்கூடாது என பதிவிட்டிருந்தார்.

அதேபோல், நடிகர் கார்த்தியும் ஒன்றிய அரசு இந்த சட்டத்தில் மேற்கொள்ள உள்ள திருத்தத்தை கைவிட வேண்டும் என ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், எப்போது வேண்டுமானாலும் ஒரு திரைப்படத்தின் சென்சார் சான்றிதழை ரத்து செய்யும் அதிகாரம் இந்த சட்ட திருத்தத்தின் ஊடாக மத்திய அரசின் கைகளுக்கு செல்வது வியாபார ரீதியாக ஒவ்வொரு படத்தையும் பாதிக்கக்கூடும். அதனால் இந்த சட்டத்தில் மேற்கொள்ளப்பட உள்ள திருத்தத்தை கைவிட வேண்டும்.
அதே நேரத்தில் பைரசியை தடுக்க இந்த சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்களை வரவேற்கத்தக்கவை. இருந்தாலும் ஜனநாயக நாட்டில் கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையைநசுக்கும் விதமாக உள்ளது என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.
While draft measures to curb piracy are commendable, it is highly undesirable to strangle freedom of expression in a civilized society as ours. Therefore request the goverment to heed our request.#CinematographAct2021 #FreedomOfExpression
— Actor Karthi (@Karthi_Offl) July 2, 2021
newstm.in

