மத்திய அரசை தொடர்ந்து அடுத்தடுத்து அறிவிப்பு.. ராஜஸ்தானிலும் பிளஸ் டூ மாணவர்கள் உற்சாகம்!
மத்திய அரசை தொடர்ந்து அடுத்தடுத்து அறிவிப்பு.. ராஜஸ்தானிலும் பிளஸ் டூ மாணவர்கள் உற்சாகம்!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஓராண்டுக்கு மேலாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் வீட்டில் இருந்து கல்வி பயின்று வந்தாலும் தேர்வு ரத்துசெய்யப்பட்டுள்ளது. ஆனால் பிளஸ் டூ மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படுமா ரத்து செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் எழுந்தது.
இந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக நேற்று முன்தினம் பிரதமர் மோடி தலைமையில் நடந்த உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில், சி.பி.எஸ்.இ. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்வது என முடிவு செய்யப்பட்டது. சி.பி.எஸ்.இ. பிளஸ் டூ தேர்வு ரத்து செய்யப்பட்டதால் மாநில கல்வி வாரியத்தில் பயிலும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வுகள் நடக்குமா? என்ற கேள்விக்குறி நிலவி வருகிறது.

சி.பி.எஸ்.இ. பிளஸ் டூ தேர்வு நடக்காது என அறிவிக்கப்பட்டுவிட்டதால் அடுத்து மாநில அரசுகளும் இதே முடிவை எடுக்கும் என கருதப்படுகிறது. அந்த வகையில் குஜராத், மத்திய பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்கள் 12ஆம் வகுப்பு தேர்வையும் ரத்து செய்து நேற்று அறிவிப்பு வெளியிட்டன. மேலும் அரியானா, கோவா அரசும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளன.

இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக 10, +2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக ராஜஸ்தான் அரசும் அறிவித்துள்ளது. ஓராண்டுக்கு மேலாக பாடம் நடத்தாமல் தேர்வுக்கு மட்டும் மாணவர்கள் எப்படி தயாராக முடியும் என கேள்வி எழுந்த நிலையில் தற்போது அடுத்தடுத்து ரத்து செய்யப்பட்டு வருகிறது.
newstm.in

