Theme Check

அடி, உதை, வாழைப்பழத்தில் புள்ளப்பூச்சி… இளம்பெண் தற்கொலை!!

அடி, உதை, வாழைப்பழத்தில் புள்ளப்பூச்சி… இளம்பெண் தற்கொலை!!

அடி, உதை, வாழைப்பழத்தில் புள்ளப்பூச்சி… இளம்பெண் தற்கொலை!!
X

கடலூர் அருகே வரதட்சணை கொடுமையால் இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய குடும்பத்திற்கு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த வினோத்குமார் (30) - சூர்யா (21) ஆகிய இருவருக்கும் கடந்த 30.1.2017 அன்று திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது 20 பவுன் நகை, ரூ.2½ லட்சம் ரொக்கம் மற்றும் சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன.

இந்நிலையில், திருமணமாகி 6 மாதங்களுக்கு பிறகு வினோத் குமார் தனது மனைவி சூர்யாவின் நகைகளை அவருக்கு தெரியாமல் அடகு வைத்தார். இதுபற்றி அறிந்த சூர்யா, வினோத்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் தட்டிக்கேட்டுள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த அவர்கள் சூர்யாவை திட்டி தாக்கினர். குழந்தை இல்லாததை கூறி வாழைப்பழத்தில் புள்ளப்பூச்சியை வைத்து சூர்யாவை வலுக்கட்டாயமாக உண்ண வைத்தனர். இதில் மனமுடைந்த சூர்யா 6.4.2018 அன்று தற்கொலைக்கு முயன்றார்.

cld

அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். டிஸ்சார்ஜ் ஆன பிறகு வினோத்குமார் மற்றும் அவரது பெற்றோர் வரதட்சணையாக 5 பவுன் நகை வாங்கி வரும்படி கொடுமைப் படுத்தியுள்ளனர். சூர்யா தனது பெற்றோரிடம் 4 பவுன் நகையை வாங்கி வந்து கொடுத்தார்.

அதன்பிறகு சூர்யாவை அடித்து உதைத்து வீட்டை விட்டு துரத்தினர். அதுகுறித்து சூர்யா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதனால் வினோத்குமார், சூர்யாவிடம் பேசாமல் இருந்துள்ளார்.

Court

இதனால் மனமுடைந்த சூர்யா 14.8.2018 அன்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில், வினோத்குமாருக்கு 10 ஆண்டு சிறையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அவரது பெற்றோருக்கு தலா 7 ஆண்டு சிறை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும், தங்கைக்கு ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Next Story
Share it