3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி எப்போது..? - சீரம் நிறுவனம் தகவல்..!
3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி எப்போது..? - சீரம் நிறுவனம் தகவல்..!

இந்தியாவில் இன்னும் 6 மாதங்களில், 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு செலுத்தும் வகையிலான தடுப்பூசி தயாராகும் என்று சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவி ஷீல்டு, கோவேக்சின், ஸ்புட்னிக் உள்ளிட்ட தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன.
12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு ஜைடஸ் கடிலா நிறுவனத்தின் சைகோவ் - டி தடுப்பூசிக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனினும், 12 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்களுக்கான தடுப்பூசிக்கு இந்தியாவில் இன்னும் ஒப்புதல் அளிக்கப்படவில்லை.
இந்நிலையில், இந்தியாவில் இன்னும் 6 மாதங்களில் 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு செலுத்தும் வகையிலான கொரோனா தடுப்பூசி (கோவேவக்ஸ்) தயாராகும் என்று சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் தலைவர் அடர் பூனவல்லா தெரிவித்துள்ளார். மேலும், தற்போது பரிசோதனையில் உள்ள இந்த தடுப்பூசி நல்ல செயல்திறன் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

