Theme Check

3வது முறையாக ஆட்சியமைக்கிறது ஆம் ஆத்மி! டெல்லியில் தொண்டர்கள் கொண்டாட்டம்!!

3வது முறையாக ஆட்சியமைக்கிறது ஆம் ஆத்மி! டெல்லியில் தொண்டர்கள் கொண்டாட்டம்!!

3வது முறையாக ஆட்சியமைக்கிறது ஆம் ஆத்மி! டெல்லியில் தொண்டர்கள் கொண்டாட்டம்!!
X

டெல்லியில் 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபையின் பதவிக்காலம் வரும் பிப்ரவரி 22ம் தேதியுடன் முடிவடைகிறது. இம்மாதம் 8ம் தேதி ஒரே கட்டமாக நடைப்பெற்ற தேர்தலில் 62.59 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை இன்று காலையில் துவங்கிய நிலையில், துவக்கத்தில் இருந்தே ஆம் ஆத்மி அதிகளவிலான தொகுதிகளில் முன்னிலை வகிக்கத் துவங்கின. தற்போதைய நிலவரப்படி ஆம் ஆத்மி கட்சி 51 இடங்களிலும், பாஜக 19 இடங்களில் முன்னிலை பெற்றிருக்கின்றன. தேசிய கட்சியான காங்கிரஸ் இருந்த சுவடே தெரியாமல் வாக்கு எண்ணிக்கையில் காணாமல் போயிருக்கிறது.

3வது முறையாக ஆட்சியமைக்கிறது ஆம் ஆத்மி! டெல்லியில் தொண்டர்கள் கொண்டாட்டம்!!

டெல்லியில் ஆட்சி அமைப்பதற்கு 36 இடங்கள் தேவை என்கிற நிலையில், ஆம் ஆத்மி கட்சி அதைவிட அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பாஜக இரண்டாவது இடத்தில் உள்ளது. தற்போதைய நிலவரப்படி புதுடெல்லியில் 3வது முறையாக ஆட்சியமைக்கும் வகையில் அதிக தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்கள் முன்னிலை பெற்றிருப்பதால் அக்கட்சியினர் தலைநகரில் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

3வது முறையாக ஆட்சியமைக்கிறது ஆம் ஆத்மி! டெல்லியில் தொண்டர்கள் கொண்டாட்டம்!!

ஆம் ஆத்மி கட்சி மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் அனைத்தும் ஆம் ஆத்மி கட்சி மிகப் பெரிய வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என கூறியிருக்கின்றன. கருத்துக் கணிப்புகளை நிரூபிக்கும் வகையில் ஆம் ஆத்மி கட்சி, மெஜாரிட்டிக்கு தேவையான இடங்களைவிட அதிக தொகுதிகளை கைப்பற்றும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால், மூன்றாவது முறையாக தலைநகரில் ஆட்சியை பிடிக்க உள்ளதால், ஆம் ஆத்மி கட்சியினர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

newstm.in

Tags:
Next Story
Share it