பயணிகளின் கவனத்திற்கு.. ஜன.16ம் தேதி முன்பதிவு மையங்கள் இயங்காது..!
பயணிகளின் கவனத்திற்கு.. ஜன.16ம் தேதி முன்பதிவு மையங்கள் இயங்காது..!

தமிழகத்தில் சமீப நாட்களாக கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதேபோன்று, ஒமைக்ரான் பாதிப்புகளும் உயர்ந்து வருகிறது. இதனால், இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ஆகியவை கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதால், வரும் 16-ம் தேதி சென்னை கோட்டத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் டிக்கெட் முன்பதிவு செய்யும் மையங்கள் இயங்காது’ என கூறப்பட்டுள்ளது.
Next Story

