Theme Check

பயணிகளின் கவனத்திற்கு.. இந்த ரயில்கள் ரத்து.. தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

பயணிகளின் கவனத்திற்கு.. இந்த ரயில்கள் ரத்து.. தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

பயணிகளின் கவனத்திற்கு.. இந்த ரயில்கள் ரத்து.. தெற்கு ரயில்வே அறிவிப்பு..!
X

பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘நாளை (26ம் தேதி) காலை 11.10 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை இயக்கப்படும் மின்சார ரயில் (40413), தாம்பரத்தில் இருந்து நாளை இரவு 10.25 மணிக்கு சென்னை கடற்கரை இயக்கப்படும் ரயில் (40144), தாம்பரத்தில் இருந்து இரவு 11.25 மணிக்கு சென்னை கடற்கரை இயக்கப்படும் மின்சார ரயில் (40148) ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல், வேளச்சேரியில் இருந்து காலை 9.40 மணிக்கு சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் ரயில் (41523), வேளச்சேரியில் இருந்து காலை 9.10 மணிக்கு சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் ரயில் (41516), 27ம் தேதியும், வேளச்சேரியில் இருந்து இரவு 10.10 மணிக்கு சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் ரயில் (41134), 26ம் தேதியும் ரத்து செய்யப்படுகிறது.

மேலும், வேளச்சேரியில் இருந்து பயணிகள் சிறப்பு ரயில் (41134) நாளை இரவு 10.40 மணிக்கு சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும். சென்னை கடற்கரை - செங்கல்பட்டு- திருமால்பூர் இடையே 61 மின்சார ரயில்கள், செங்கல்பட்டு - திருமால்பூர் - சென்னை கடற்கரை இடையே 62 மின்சார ரயில்கள் என 123 மின்சார ரயில்கள் மட்டுமே 27ம் தேதி இயக்கப்படும்.

அந்த ரயில்கள் அனைத்தும் சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும். மேலும், மதுரை நிஜாமுதீன் அதிவிரைவு ரயில் (12651) எழும்பூர் ரயில் நிலையத்தில் 27ம் தேதி 80 நிமிடம் தாமதமாக புறப்படும்.

ஹைதராபாத் - தாம்பரம் சார்மினார் (12760) அதிவிரைவு ரயில் வரும் 26-ம் தேதி சென்னை கடற்கரை வரை இயக்கப்படும். சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கு இயக்கப்படாது’ இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Next Story
Share it