வரலாற்றில் முதல் முறை.. பிரதமர் மோடி தலைமையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் !!
வரலாற்றில் முதல் முறை.. பிரதமர் மோடி தலைமையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் !!

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் வீடியோ கான்பரன்சிங் முறையில் இன்று நடைபெற உள்ளது.
இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் இன்று (ஆக.9) காணொலி மூலம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாட்டின் தலைவர்கள் வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்து கொள்கின்றனர். ரஷ்யா நாட்டின் சார்பாக அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் பங்கேற்கிறார்.

கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் அது தொடர்பான சர்வதேச ஒத்துழைப்பு குறித்து இந்தக் கருத்தரங்கில் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்துக்கு தலைமை வகிக்கப் போகும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை நரேந்திர மோடி பெறவுள்ளார் என்று ஐ.நா.சபைக்கான முன்னாள் இந்தியத் தூதர் அக்பருதீன் தெரிவித்துள்ளார்.

இந்த கவுன்சிலில் அங்கம் வகிக்கும் நாடுகள் ஒவ்வொன்றும் சுழற்சி முறையில் ஒவ்வொரு மாதமும் கவுன்சிலுக்கு தலைமை தாங்கும். அந்த வகையில் இந்தியா இந்த மாதம் பாதுகாப்பு கவுன்சிலுக்கு இந்தியா தலைமை ஏற்றுள்ளது.
newstm.in

