தனுஷ் பட பாணியில் மருத்துவரை கடத்தி நடந்த கட்டாய திருமணம்..!!
தனுஷ் பட பாணியில் மருத்துவரை கடத்தி நடந்த கட்டாய திருமணம்..!!

விலங்குக்கு உடல் நிலை சரியில்லை என கூறி கால்நடை மருத்துவர் ஒருவக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதை உண்மை என நம்பி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கால்நடை மருத்துவரை மிரட்டி ஒரு பெண்ணின் கழுத்தில் கட்டயா தாலி கட்ட வைத்து. கட்டாய திருமணம் செய்து வைத்தனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மருத்துவரின் உறவினர் ஒருவர் கூறுகையில், “நள்ளிரவு 12 மணிக்கு நோயால் பாதிக்கப்பட்ட விலங்கைப் பரிசோதிக்குமாறு அழைப்பு வந்தது. அதையடுத்து அவர் கிளம்பி சென்றபோது, அவரை மூன்று பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்றனர். வீட்டில் இருக்கும் அனைவரும் அதிர்ச்சியடைந்து போலீசிடம் புகார் அளிக்கச் சென்றோம்” எனக் கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பாக மணமகனின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பெகுசாராய் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் யோகேந்திர குமார் தெரிவித்துள்ளார்.
மணமகன் கடத்தல் அல்லது கட்டாய திருமணம் என்பது பீகார், ஜார்கண்ட் மற்றும் உத்தரபிரதேசத்தின் சில பகுதிகளில் அடிக்கடி நடக்கும் ஒரு நிகழ்வாக மாறி வருகிறது. துப்பாக்கி முனையில் வாலிபர்கள் கடத்தபட்டு அங்கு திருமணம் செய்ய கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். அதிக ஊதியம், சொத்து வைத்திருக்கும் திருமணம் ஆகாத ஆண்களை கடத்திச் சென்று கத்தி, துப்பாக்கி முனையில் திருமணம் செய்து வைக்கும் சம்பவம் நடைபெற்று வருகிறது.
बिहार की पकड़ौआ शादी!
— Utkarsh Singh (@UtkarshSingh_) June 14, 2022
बेगूसराय में वेटनरी डॉक्टर सत्यम झा के पिता ने अपने बेटे का अपहरण कर जबरन शादी कराने की शिकायत दर्ज कराई है, पुलिस जाँच में जुटी. pic.twitter.com/Zx1r3yq8JK
சில ஆண்டுகளுக்கு முன்பு, பீகாரில் பொகாரோ ஸ்டீல் ஆலையில் ஜூனியர் மேனேஜராக இருந்த 29 வயதான வினோத் குமார், பாட்னாவில் உள்ள பண்டாரக் பகுதியில் கடத்தப்பட்டு கடுமையாகத் தாக்கி திருமணம் செய்து வைக்கபட்டார்.

